ஓரிரு நாட்களுக்கு முன் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழு ஒன்றுக்கும் இடையில் நாடாளுமன்றில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
அது அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான சந்திப்பு.
அப்போது அந்தக் குழுவினர் பிரதி சபாநாயகரிடம் ஒரு கேள்வி கேட்டனர்.
''ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ ஞாபகார்த்த மண்டபம் இப்போது மிளகாய் காய வைக்கும் இடமாகப் பாவிக்கப்படுகிறதாமே..;;
இதைக் கேட்ட பிரதி சபாநாயகருக்கு ஒரே அதிர்ச்சி.
''இல்லை..இல்லை.அப்படி ஏதும் இல்லை.இது எதிர்க்கட்சிகள் பரப்பும் போலிப் பிரசாரம்...'' என்றார் அடித்துப் பிடித்துக்கொண்டு.
அத்தோடு அங்கு வந்து பார்க்குமாறும் கூறினார்.
இதை அந்தக் குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.