பொதுவாக அரசியல்வாதிகள்-அமைச்சர்கள் சாதாரண மக்கள் செல்லும் இடங்களுக்குச் சென்று பொருட்கள் வாங்கமாட்டார்கள்.
அவர்கள் vip க்கள் லிஸ்ட்டில் அவர்களை சேர்த்துக்கொண்டு vipக்கள் ஏரியாவுக்கே பொருட்கள் வாங்கச் செல்வார்கள்.
ஜேவிபி எம்பிக்கள் மாத்திரமே சாதாரண மக்கள் செல்லும் கடைகளுக்குச் செல்வார்கள்.
ஆனால்,தான் இதற்கு விதிவிலக்கானவர் என்று காட்டியுள்ளார் நடிகையும் இராஜாங்க அமைச்சருமான கீதா குமாரசிங்க.
கடந்த வாரம் அவர் புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத் தெருவுக்குச் சென்று ஆடை வாங்கியுள்ளார்.
அந்தத் தெருவுக்குள் வாகனம் செல்ல முடியாது.இதனால் வாகனத்தை வேறோர் இடத்தில் நிறுத்திவிட்டு நடையில் சென்று கடை கடையாக ஏறி பொருட்கள் வாங்கியுள்ளார்.
அவரை அடையாளம் கண்ட வர்த்தகர்கள் அவரை நல்லமுறையில் கவனித்து அனுப்பியுள்ளனர்.அவரும் மக்களுடன் நற்பாகப் பழகித் திரும்பியுள்ளார்.
ஒருவேளை,தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைதான் அவரை அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்குமோ...?