நவம்பர் 2 இல் கொழும்பில் நடத்தப்பட்ட அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தயாராக இருந்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
அப்பபோதுதான் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் சிலர் சஜித்துக்கு எதிராக கூக்குரல் எழுப்பினர்.
இந்த நிலையில் மைத்திரி வந்தால் அவருக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்று அஞ்சினார் தயாசிறி ஜயசேகர.
அப்போது தயாசிறி அங்குதான் நின்றார்.
உடனே மைத்திரிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து நிலைமை மோசம்.இப்போது வரவேண்டாம் என்றார் தயாசிறி.
''அப்பாடா..தப்பினேன்'' என்று பெருமூச்சு விட்டார் மைத்திரி.