21 ஆவது திருத்தச் சட்டத்தின்படி 2.5 வருடங்களில் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.
அப்படிச் செய்வீர்களா என்று மஹிந்தானந்த அழுத்கமகே ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றின்போது ஜனாதிபதியிடம் வினவியுள்ளார்.
சபையை கலைக்குமாறு நீங்கள் வெற்றிலை வைத்து கெஞ்சிக் கேட்டாலும் கலைக்கமாட்டேன்.பயப்புட வேண்டாம் என்று உறுதி வழங்கியுள்ளார் ஜனாதிபதி.
அதுமட்டுமா இரட்டை பிரஜா உரிமை விவகாரம் தொடர்பில் காமினி லொக்குகே அதே சந்திப்பில் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மையில்,அந்தத் திருத்தம் நான் கொண்டு வந்ததல்ல.கோத்தாபய கொண்டு வந்தது என்று பதிலளித்துள்ளார்.