இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் பிரவேசிக்கலாம் என்ற 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடத்துக்கு பின்பே பசில் நாடாளுமன்றம் நுழைந்தார்.
அப்போது நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணாத் தொடங்குகிறது.
அப்போது பிரசன்ன ரணதுங்க-நிமால் லான்சா ஆகியோர் பசிலை சந்திக்கிறார்கள்.
''சேர்..நீங்கள் இந்த நிலைமையில் நாடாளுமன்றம் நுழைய வேண்டாம்.பின்னணியில் இருந்துகொண்டே செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.
பசில் கேட்கவில்லை.
இறுதியில் பொருளாதார பிரச்சினைக்கு அவரும் ஒரு காரணமானார்.