விஜேராமவில் அமைந்துள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் புனர்நிர்மாணம் செய்யப்படுகிறது.
அதுவரை அவர் புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜனக பண்டாரவின்
உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார்.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு திருகோணமலைக்கு ஓடிய மஹிந்த திரும்பி வந்து தங்கியது இந்த வீட்டில்தான்.
மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் திருத்தப்பட்டு அந்த வீட்டுக்கு அவர் குடிபெயர்ந்ததும் இப்போது இருக்கும் இல்லத்தைத் தனக்குத் தருமாறு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
கோத்தா இப்போது இருப்பது மலலசேகர மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில்.
பல வீடுகள் அப்போது அவருக்காகத் தேடப்பட்டு இறுதியில் ஜனக பண்டாரவின் வீடுதான் பாதுகாப்பு எனக் கருதி அதை எடுத்துக்கொண்டார் மஹிந்த.