அரச பங்களா உள்ளிட்ட பல இடங்களில் தங்கி இருந்த எம்பிக்கள் 92 பேர் அதன் வாடகையை இன்னும் செலுத்தவில்லை என்று அரச கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
அவ்வாறு இவர்கள் 79 லட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளது என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் 51 லட்சம் ரூபா 2015 இல் இருந்து 2020 வரை தங்கி இருந்த 72 எம்பிக்கள் செலுத்த வேண்டியுள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது.