ஜா-எல பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
அவன் இதுவரை 29 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான்.30ஆவது சம்பவத்தின்போதுதான் கைது செய்யப்பட்டான்.
மீன் வியாபாரி ஒருவரின் 9700 ரூபா பணம் திருட்டு போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதுதான் இந்தச் சிறுவன் சிக்கியுள்ளான்.
அவனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது அவன் இது வரை 29 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்தது.
பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை அவன் திருடியுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.