கம்பஹாவில் அமைந்துள்ள விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவரின் வீட்டில் நுழைந்த திருடன் 6 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பால் மா பாக்கட்களையும் திருடிச் சென்றுள்ளான்.
பொலிஸ் அதிகாரியும் அவரது மனைவியும் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டுக்குள் நுழைந்த திருடன் இந்தத் துணிகர திருட்டை மேற்கொண்டுள்ளான் என கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.