Home / Lead News / Post:6779

ரணிலுடன் இணையும் சஜித் தரப்பின் 20 எம்பிக்கள்: தடுக்கும் நடவடிக்கையில் சஜித் தீவிரம்..

Thu, 18 Aug 2022 08:36:22 +0530 | News Desk
ரணிலுடன் இணையும் சஜித் தரப்பின் 20 எம்பிக்கள்: தடுக்கும் நடவடிக்கையில் சஜித் தீவிரம்..

ரணிலின் அரசுடன் சஜித் தரப்பு எம்பிக்கள் சுமார் 20 பேர் வரை இணையவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுள் சிரேஷ்ட தலைவர்களும் கட்சித் தலைவர்களும் அடங்குகின்றனர் என்று அறிய முடிகிறது.

இவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பல தடவைகள் ரகசிய பேச்சுக்குக்களை 
நடத்தியுள்ளனர் என்று ரணில் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

ரணில் ஜனாதிபதியானது முதல் ஏனைய கட்சிக்களின் எம்பிக்களை வளைத்துப் போடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் அதன் பயனாகவே இந்த இணைவு இடம்பெறப்போகிறது என்றும் அறிய முடிகிறது.

இந்தச் செய்தி அறிந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் சஜித் பிரேமதாசா இறங்கியுள்ளார் என்றும் அது தொடர்பில் அவர் அவரது கட்சி எம்பிக்களை சந்திக்கிறார் என்றும் அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,அனைத்துக் கட்சிகளையும் இணைத்து சர்வகட்சி அரசு ஒன்றை அமைப்பதற்கான முயற்சியும் ஒரு பக்கம் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us