Home / Lead News / Post:6775

பெரும்பான்மையை நிரூபிக்கும் போட்டி:  இரண்டாகப் பிளவுபடும் பல கட்சிகள் 

Sun, 15 May 2022 11:06:28 +0530 | News Desk
 பெரும்பான்மையை நிரூபிக்கும் போட்டி:  இரண்டாகப் பிளவுபடும் பல கட்சிகள் 

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஜனாதிபதி நேற்று இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் எம்பிக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

பொதுஜன பெரமுனவின் எம்பிக்கள் பலர் சுயாதீன குழுவாக மாறியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது.

இந்தநிலை,மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகியதால் பொதுஜன பெரமுனவில் உள்ள மஹிந்தவின் ஆதரவு எம்பிக்கள் பலர் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்குத் தயாராகி வருகின்றனர் என்று தகவல்கள தெரிவிக்கின்றன.

அதேபோல்,சுயாதீன குழுவில் இணைந்துள்ள எம்பிக்கள் பலர் புதிய அரசில் இணைவதற்குத் தயாராகி வருகின்றனர் என்றும் அறிய முடிகிறது.

மேலும்,ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கின்ற பல எம்பிக்களை அரசில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இந்த அடிப்படையில் சில கட்சியில் அரசில் இணைவதற்கு பலர் திட்டமிட்டுள்ளதாலும் பொதுஜன பெரமுனவில் இருந்து சிலர் எதிர்கட்சிக்கு செல்லவிருப்பதாலும் எல்லா கட்சிகளும் இரண்டாகப் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us