Home / Local News / Post:6765

அரசுக்கு எதிராக இதுவரை 120 எம்பிக்கள்:இன்னும் இணைவர் 

Mon, 25 Apr 2022 13:26:58 +0530 | News Desk
அரசுக்கு எதிராக இதுவரை 120 எம்பிக்கள்:இன்னும் இணைவர் 

அரசுக்கு எதிராக எதிர் தரப்பில் இதுவரை 120 எம்பிக்கள் இணைந்துள்ளனர் என்று உதய கம்மன்பில எம்பி இன்று கூறினார்.

சஜித் அணியில் 65 எம்பிக்கள்.42 பேர் அரசில் இருந்து எதிர்தரப்புக்கு மாறினோம்.அதில் மூவர் மீண்டும் அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை எடுத்தனர்.இதனால் 39 எம்பிக்களாகக் குறைந்தனர்.65 உம் 39 உம் சேர்ந்து 104 எம்பிக்கள். 

இடைக்கால சர்வகட்சி  அரசை உருவாக்குவதற்காக அரசு உடன் பதவி விலக வேண்டும் என்று 10 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்களையும் சேர்த்தால் 114 பேர்.

20 ஆவது திருத்தத்துக்கு அரசுக்கு ஆதரவு வழங்கிய 3 முஸ்லீம் எம்பிக்கள் இப்போது அரசுக்கான ஆதரவை நீக்கிக்கொண்டு மீண்டும் அவர்களது கட்சிக்குத் திரும்பியுள்ளனர்.அவர்களுடன் சேர்த்து 117 பேர்.

நாளக கொடகேவா,டலஸ் அழகப்பெரும மற்றும் சரித ஹேரத் ஆகியோரும் சர்வ கட்சி இடைக்கால அரசை உருவாக்குவதற்காக அரசு விலக வேண்டும் என்று கூறியுள்ளனர்.அவர்களுடன் சேர்த்து 120 பேர்.

இந்த 120 பேரும் அரசு விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.அதேபோல் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்படும்போது அரசில் உள்ள அதிகமான எம்பிக்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பர்.என்றார். 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us