Home / Local News / Post:6763

அபிவிருத்தியில் என்னோடு யாரும் மோதமுடியாது 

Sun, 24 Apr 2022 12:09:09 +0530 | News Desk
அபிவிருத்தியில் என்னோடு யாரும் மோதமுடியாது 

அபிவிருத்தியில் என்னோடு யாரும் மோதமுடியாது.அதில் நான் தோல்வியடைந்தால் இராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவேன் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:

225 பேரும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை ஏற்க முடியாது.எல்லோரும் ஒன்றுதான் என்பதில் உடன்படுகிறேன்.

நாங்கள் 2020 பெப்ரவரியில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம்.எல்லோரும் ஒன்றுதான் என்ற கருத்தில் இருந்து மாறுபடுவதே எமது நோக்கம்.

அபிவிருத்தியில் என்னோடு யாரும் மோதமுடியாது.மோதிப்பாருங்கள்.அதில் நான் தோல்வியடைந்தால் இராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவேன்.என்றார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us