புலிகளின் தலைவர் பிரபாகரன் படகுகள் கொள்வனவு செய்வதற்காக பஸில் ராஜபக்ஸ அப்போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கினார் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்:
நாடு இப்போது மிகவும் இக்கட்டான கட்டத்தில் உள்ளது.நாடாளுமன்றில் உள்ள அதிகமானவர்கள் பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள்தான்.நாடாளுமன்றில் உள்ள 90 வீதமானவர்கள் ஊழல்வாதிகள்.
அதிகமான அரசியல்வாதிகள் பலவீனமானவர்கள்.
என்னிடம் அதிகாரத்தை ஒப்படைத்தால் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கி 2 வருடங்களில் நாட்டைக் கட்டி எழுப்புவேன்.
நாடு வீழ்ச்சி அடையும் இந்த நேரத்தில் சவாலை ஏற்று நாட்டை பாரமெடுக்க தலைவர்கள் யாரும் தயாரில்லை.
நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது.அரசமைப்பில் மாற்றம் செய்தால்கூட நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டால்கூட நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு பின் என்ன செய்வது என்ற உறுதியான நிலைப்பாடு இல்லை.
இந்த நேரம் நாட்டை பாரமேற்காவிட்டால் எதிர்க்கட்சியாக இருந்து வேலை இல்லை.
ரணில் நினைத்துக்கொண்டு இருக்கிறார் அவரைத் தவிர பொருளாதார நிபுணர் யாரும் இல்லை என்று.5 தடவைகள் பிரதமராக இருந்து அவர் நாட்டுக்குச் செய்தது ஒன்றுமில்லை.
மஹிந்த ராஜபக்ஸ புலிகளுடன் போர் செய்ய விரும்பவில்லை.பயத்தில் இருந்தார்.எனது விருப்பத்தின் பேரிலேயே போர் செய்யப்பட்டது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் படகுகள் கொள்வனவு செய்வதற்காக பஸில் ராஜபக்ஸ அப்போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கினார் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.என்றார்.