இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கு வசதியாக மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று சுயாதீன எம்பிக்கள் 40 பேரும் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்படி விலகாவிட்டால் எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று அறிய முடிகிறது.
ஆனால்,இடைக்கால அரசு உருவானால் அதிலும் நானே பிரதமர் என்று மஹிந்த நேற்று தெரன தொலைக்காட்சியிடம் கூறியமை குறிப்பிடத்தக்கது.