Home / Local News / Post:6752

10 நாட்களுக்கு போதுமான பெற்றோல்; 14 நாட்களுக்குப் போதுமான டீசல் கையிருப்பில்!

Wed, 20 Apr 2022 13:51:45 +0530 | News Desk
10 நாட்களுக்கு போதுமான பெற்றோல்; 14 நாட்களுக்குப் போதுமான டீசல் கையிருப்பில்!

10 நாட்களுக்கு போதுமான பெற்றோலும் 14 நாட்களுக்குப் போதுமான டீசலும் கையிருப்பில் உள்ளது என்று அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இன்றும் கப்பல் வருகிறது நாளையும் வருகிறது என்று மேலும் கூறினார்.ஏற்கனவே வந்த கப்பலில் இருந்து எரிபொருள் இறக்கப்படுகிறது என்றும் கூறினார்.

அதேபோல்,மின்சக்திக்கு தேவையான டீசல் வழங்கப்பட்டுள்ளது.விநியோகிப்பதில்தான் பிரச்சினை உள்ளது என்று அவர் கூறினார்.

ஆனால்,அரசு சொல்வதுபோல் போதுமான அளவில் எரிபொருள் கையிருப்பில் இல்லை.தினமும் நான்கு கப்பல்கள் வந்தால்தான் போதுமான அளவு கிடைக்கும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு கூறினார் காஞ்சன விஜயசேகர.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us