Home / Gossips / Post:6739

மஹிந்தவின் பணம் கொள்ளை:  சிக்கியது இப்படித்தான் 

Sun, 30 Jan 2022 10:58:21 +0530 | News Desk
மஹிந்தவின் பணம் கொள்ளை:  சிக்கியது இப்படித்தான் 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் வங்கிக்கணக்கில் இருந்து 3 கோடி ரூபா பணம் திருடப்பட்டமை எப்படி என்று தெரியுமா?

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் மஹிந்தவின் பெயரிலான  ATM அட்டை ஒன்றின் ஊடாக 1.5 லட்சம் ரூபாவுக்கு ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

அந்த ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கணக்கை பரிசோதித்தபோது இது தெரிய வந்தது.அவர் மஹிந்தவின் நண்பன். இதனால் மஹிந்தவிடம் இதுபற்றி விசாரித்தார்.

அப்போது தான் அப்படி ஆடைகள் எவையும் கொள்வனவு செய்யவில்லை என்றார் மஹிந்த.பின்னர் வங்கிக்கணக்கை சோதித்துப் பார்த்தார் மஹிந்த.3 கோடி ரூபா அதில் இருந்து செலவழிக்கப்பட்டமை தெரியவந்தது.

அதன்பின் மேற்கொண்ட விசாரணையில் அவ்வாறு செலவழித்தது மஹிந்தவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் என்பது தெரிய வந்தது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us