Home / Gossips / Post:6672

சபை புறக்கணிப்பு: நாடாளுமன்றத்துக்குச் சென்று அமைச்சர்களிடம் வினவிய ஜனாதிபதி 

Sat, 11 Dec 2021 10:21:15 +0530 | News Desk
சபை புறக்கணிப்பு: நாடாளுமன்றத்துக்குச் சென்று அமைச்சர்களிடம் வினவிய ஜனாதிபதி 

கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தைப் புறக்கணித்ததை நாம் அறிவோம் 

அந்தச் சமயம் நாடாளுமன்றுக்குச் சென்றார் ஜனாதிபதி.அது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக.

அவரை அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன,ஜோன்சன் பெர்னாண்டோ,ரோஹித அபயகுணவர்தன,மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் ஜயந்த கெட்டகொட எம்பி ஆகியோர்  வரவேற்றனர்.

அவர் நேராக ஜனாதிபதி அலுவலகத்துக்குள் சென்றார்.

''உள்ளே என்ன செய்தி''

அவர்களிடம் வினவினார் ஜனாதிபதி.

''ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் சபை அமர்வுகளை புறக்கணித்துவிட்டார்கள் சேர்.ஜோன்சடன் மினிஸ்டர் மனுஷ நாணயக்காரவுக்கு அடிக்கப் போனார் என்று சொல்கிறார்கள்''என்றனர்.

''இல்லை..இல்லை..அவர்கள் வருவார்கள்.பிரச்சினை ஏற்படுத்த வேண்டாம்''என்றார் ஜனாதிபதி.

சம்பவம் ஒன்றும் நடக்கவில்லை.கடந்த நாட்களில் இதைவிட மோசமான சம்பவங்கள் நடந்தன.அப்போதெல்லாம் அவர்கள் சபையை புறக்கணிக்கவில்லை என்றார் மஹிந்தானந்த.

அவர்கள் சபைக்கு வராவிட்டாலும் நாடாளுமன்றுக்கு வருகிறார்கள் சேர் என்றார் ஜோன்சன்.

''ஓம் சேர்.சரியாக சாப்பாடு நேரத்தில் வருகிறார்கள்.நேராக கேன்டீன் சென்று சாப்பிட்டிவிட்டுப் போகிறார்கள்'' என்றார் மஹிந்தானந்த.

இவ்வாறு 10 நிமிடங்கள் இதைப்பற்றி பேசினர்.பின்னர் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் அறைக்குச் சென்றார் ஜனாதிபதி.

 

 

 

 

 

 

 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us