Home / Gossips / Post:6612

அமைச்சர்களை வெளியே நிறுத்திவிட்டு மஹிந்த-ரணில் ரகசியப் பேச்சு 

Mon, 15 Nov 2021 16:42:23 +0530 | News Desk
அமைச்சர்களை வெளியே நிறுத்திவிட்டு மஹிந்த-ரணில் ரகசியப் பேச்சு 

கடந்த புதன் கிழமை ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு இடையில் ரகசிய சந்திப்பு ஒன்று நாடாளுமன்றில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மஹிந்தவுடன் வந்த அமைச்சர்கள்,எம்பிக்கள் ஆகியோர் அலுவலகத்துக்கு வெளியே நிற்க இருவர் மட்டும் அறைக்குள் 10 நிமிடங்கள் உரையாடியுள்ளனர்.

அன்றைய தினம் மஹிந்தவை சந்திப்பதற்குத் தயாராக வந்திருந்தார் ரணில்.அவர்கள் இருவரும் அன்று சபையில்.

மஹிந்த சபையில் இருந்து வெளியேறும்வரைக் காத்திருந்தார் ரணில்.மஹிந்த வெளியேற,ரணிலும் வெளியேறு சுற்றி வந்து மஹந்தவை சந்தித்தார்.

''உங்களைத்தான் சந்திக்க வந்தேன்'' என்றார் ரணில்.

''அப்படியா..வாருங்கள் அலுவலகத்துக்குச் சென்று பேசுவோம்'' என்று கூறி ரணிலை அழைத்துச் சென்றார் மஹிந்த.

மஹிந்தவுடன் அமைச்சர்கள்,எம்பிக்கள் பட்டாளமே இருந்தது.அலுவலகத்தை நெருங்கியதும் அவர்கள் உள்ளே போகவில்லை.வெளியே நின்றுவிட்டார்கள்.

அவர்களுக்குத் தெரியும் அது ரகசிய பேச்சு என்று.அவர்கள் அனைவரும் வெளியே நிற்க இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளனர்.

அதன் பின்னர் ரணில் வெளியேறிச் சென்றுவிட்டார்.ஏதோவொரு முக்கியமான தகவலை ரணில் வழங்கிவிட்டுப் போயுள்ளார் என்று ஊகிக்கிறது தகவல் அறிந்த வட்டாரம்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us