Home / Gossips / Post:6458

இம்ரான் கானின் இலங்கை விஜயம்:சுவாரசியமான சம்பவங்கள் சில....

Mon, 01 Mar 2021 10:12:23 +0530 | News Desk
இம்ரான் கானின் இலங்கை விஜயம்:சுவாரசியமான சம்பவங்கள் சில....

### பெப்ரவரி 23 ஆம் திகதி பிற்பகல் 4.10 இற்குத்தான் இம்ரான்கான் இலங்கை வந்து சேர்ந்தார்.

### அவர் இந்திய வான் பரப்பைத் தவிர்த்து அரேபிய கடலின் ஊடாகவே வந்தார்.இந்தியா அதன் வான் பரப்பை வழங்கியபோதும் பாதுகாப்புக் கருதி அதை அவர் தவிர்த்திருந்தார். 

### அவருக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான சந்திப்பின்போது மஹிந்த புலிகளை கொன்றொழித்தமைக்காக மஹிந்தவை புகழ்ந்து தள்ளினார் இம்ரான்.பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.

### அதேவேளை,இறுதி யுத்தத்தின்போது அப்போதைய பாக்.பிரதமர் பேர்வஸ் முஷாரப் இலங்கைக்கு வழங்கிய யுத்த உதவிகளை மஹிந்த நினைவுகூர்ந்தார்.

### 1996 இல் இலங்கை கிரிக்கட் அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது பாகிஸ்தான் ரசிகர்களும் இலங்கைக்கே ஆதரவு வழங்கினர் என்றார் இம்ரான்.

### ஆம்,அவர்கள் இலங்கை தேசிய கொடியை ஏந்தி ஆதரவு தெரிவித்தனர் என்று சொன்னார் மஹிந்த.

### இதனைத் தொடர்ந்து இம்ரானுக்கும் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 24 ஆம் திகதி இடம்பெற்றபோது,வறுமை ஒழிப்பு தொடர்பாக கோட்டா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டினார் இம்ரான்.

### அன்றைய தினம் பகல் சாப்பாட்டை சங்கிரில்லா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ.

### நாமல் ராஜபக்ஸ இம்ரானை அழைத்துக்கொண்டு சாப்பாட்டு அறைக்குச் செல்லும்போது தனக்கு நன்கு பழக்கமான முகம் ஒன்று தென்பட்டது.அது அர்ஜுன ரணதுங்க.

### உடனே நின்று '' அர்ஜுன எப்படி இருக்கிறீங்க.இப்ப என்ன செய்றீங்க'' என்று விசாரித்தார் இம்ரான்.

### ''நானும் அரசியலில்தான் இருக்கிறேன்.நான் எம்பி.இந்த முறை தெரிவாகவில்லை'' என்று கூறினார் அர்ஜுன.

### ''நான் உங்களிடம் அப்போது சொன்னேன் அல்லவா.புதுக் கட்சி ஒன்றை உருவாக்கி அரசியலில் இறங்கப்போகிறேன் என்று.அதனால்தான்,நான் இப்போது பிரதமராகியுள்ளேன்.நீங்களும் அப்படி கட்சி ஒன்றை உருவாக்கி இருக்கலாமே'' என்றார் இம்ரான்.

### ''இல்லை.நான் அப்படிச் செய்யவில்லை.என் அப்பா அரசியலுக்காக அதிகம் தியாகம் செய்திருக்கிறார்.அவர் வழியிலேயே நான் வந்துவிட்டேன்.''-என்றார் அர்ஜுன.

### பிறகு சாப்பாடு முடிந்ததும் அர்ஜுன இம்ரான் கானிடம் போய் '' அன்று எம்முடன் விளையாடிய கிரிக்கட் வீரர்கள் உங்களைக் காண வந்துளளர்கள்.'' என்று கூறி அவர்கள் நிற்கும் இடத்தைக் காட்டினார்.

### இம்ரான் கான் அவர்களைக் கண்டு பூரித்துப்போனார்.''ஓ மை கோட்.எனது நண்பர்களே'' என்று கூறிக்கொண்டு அவர்களிடம் சென்றார் இம்ரான்.

### அங்கே முன்னாள் வீரர்கள்.சிதத்,ரஞ்சன்,ரோயி,அசந்த,சங்ககார,வாஸ்,முரளி உள்ளிட்டோர் நின்றனர்.அவர்களுடன் சிறிது நேரம் சிரித்துப் பேசி மகிழ்ந்தார்.அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

### அப்போது இம்ரான் அர்ஜுணவைப் பார்த்து ''விரும்பிய நேரம் என்னோடு பேசுங்கள்.எனது தொலைபேசி இலக்கத்தை இவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று அவரது உதவியாளரைக் காட்டி கூறினார் இம்ரான்.

### உதவியாளர் அந்த நேரமே அர்ஜுனவுக்கு இம்ரானின் இலக்கத்தைக் கொடுத்து அர்ஜுனாவின் இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

### அர்ஜுனவின் சகோதரரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை மூன்று தடவைகள் சந்தித்தார் இம்ரான்.கட்டுநாயக்க விமான நிலையத்தில்,அலரிமாளிகையில்,விருந்துபசாரத்தில்.

### அலறி மாளிகையில் வைத்து பிரசன்னவை இம்ரானுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் மஹிந்த.இவர்தான் கிரிக்கட் வீரர் ரணதுங்கவின் சகோதரர் என்றார்.

### ''ஓ ..நான் பார்த்தேன்.அதே அவரது தோற்றத்தில் இருக்கிறீர்.இன்னும் ரணதுங்கக்கள் அரசியல் இருக்கிறீர்களா''? என்று கேட்டார் இம்ரான்.

### ஆம் என்றார் பிரசன்ன.

### எதிர்க்கட்சியில் யார்,அரசில் யார் என்று ஆவலுடன் கேட்டார் இம்ரான்.அவரும் பதிலளித்தார்.

### ''நான் அரசியலுக்கு வந்தபோது எனது கிரிக்கட் ரசிகர்கள் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. அவர்கள் வாக்குரிமை பெறும்வரை நான் பொறுமையாக இருந்தேன்.இப்போது வென்றுவிட்டேன்.தனி கட்சி ஒன்றை உருவாக்குமாறு நான் அப்போதே அர்ஜுனவிடம் கூறினேன்.''

என்றார் இம்ரான்.

 

   

 

 

 

 

 

 

 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us