Home / Gossips / Post:6420

தனிமைப்படுத்தல் விருதுக்கு தகுதியுடையவர் இந்த அமைச்சர் 

Sat, 30 Jan 2021 10:11:35 +0530 | News Desk
தனிமைப்படுத்தல் விருதுக்கு தகுதியுடையவர் இந்த அமைச்சர் 

எந்த வகையிலும் கொரோனா வைரஸிடம் சிக்கிவிடக்கூடாது என்பதில் கடும் உறுதியாக உள்ளாராம் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க.

அவர் தனிமைப்படுத்தல் விதிகளை நூறு வீதம் பேணி கொரோனா வைரஸிற்கு தண்ணி காட்டி வருகிறார் என்று அவரது வட்டாரம் தெரிவிக்கின்றது.

இரண்டு தடவைகள் தன்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகிறார் அவர்.

நுவரெலியா,அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதும் அவருடன் பழகிய சி.பி.உடனே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

அடுத்து அமைச்சர்கள் பவித்ராவுக்கும் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா தொற்றியது.அவர்களுடனும் இவர் பழகி இருந்தார்.இதனால் இரண்டாவது தடவையாகவும் தன்மைப்படுத்தலுக்கு உள்ளானார்.

இவ்வாறு வீழ்ந்து வீழ்ந்து நூறு வீதம் தனிமைப்படுத்தல் விதிமுறையை பின்பற்றி வருகிறார் சி.பி.இதனால் தனிமைப்படுத்தல் விருதுக்கு தகுதியுடையவர் இந்த அமைச்சர் என்கிறார்கள் அவரது அரசியல் நண்பர்கள்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us