Local News
இத்தோடு போவாரா அல்லது போனஸ் ஊடாக நாடாளுமன்றம் வருவாரா???
Fri, 07 Aug 2020 07:18:49 +0530
நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இத்தோடு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று மக்கள் மத்தியில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சஜித் பிரேமதாஸாவிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதன்மூலமே ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்ற முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அனைத்து ஆசனங்களையும் இழந்து ஒரேயொரு போனஸ் ஆசனத்தை மாத்திரம் அக்கட்சி பெற்றுள்ளது.அந்த ஆசனத்தின் ஊடாக ரணில் நாடாளுமன்றத்துக்கு வந்துவிடுவாரோ  என்ற கேள்வியும் இப்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Crime Story
போதைக்கு பணம் வழங்க மறுத்த கர்ப்பிணி மனைவி: சுடுதண்ணீர் ஊற்றி கணவன் தாக்குதல் 
Wed, 29 Sep 2021 08:58:48 +0530
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான கணவனுக்கு மனைவி பணம் தர மறுத்ததால் அவர்மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளார் அவரது கணவன். கர்ப்பிணியான அப்பெண்மீது சுடுதண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தியதால் கண் பாதிக்கப்பட்டு அப்பெண் கொழும்பு கண் சிகிச்சை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவனுக்கு 23 வயது என்றும் மனைவிக்கு 20 வயது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us