Local News
வயது 10 : கொள்ளை 30
Mon, 31 Oct 2022 08:09:50 +0530
ஜா-எல பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் இதுவரை 29 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான்.30ஆவது சம்பவத்தின்போதுதான் கைது செய்யப்பட்டான். மீன் வியாபாரி ஒருவரின் 9700 ரூபா பணம் திருட்டு போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதுதான் இந்தச் சிறுவன் சிக்கியுள்ளான். அவனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது அவன் இது வரை 29 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்தது. பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை அவன் திருடியுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Local News
வாகனத்தில் செல்லமாட்டேன்: அமைச்சரின் விமான செல்வு ரூ.1 கோடி
Sat, 29 Oct 2022 08:42:14 +0530
2019 இல் அப்போதிருந்த நிதி  அமைச்சரும் அவரது குழுவினரும் வெளி ஊர்களில் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக விமான பயனச் செலவாக மட்டும் ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. 2018 முதல் 2020 வரையான காலப்பகுதியை உள்ளடக்கி நடத்தப்பட்ட கணக்காய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் செல்வதால் அதிக நேரம் செல்லும் எனக் கருதி தனியார் விமானத்தை வாடகைக்கு அமர்த்தியே இந்த அமைச்சர் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்று அந்தக் கணக்கறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Local News
வறுமை உச்சத்தில்: திருமணத்துக்குள் சிக்கும் சிறு வயது பெண் குழந்தைகள் 
Thu, 27 Oct 2022 09:56:44 +0530
  நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வறுமை அதிகரித்துள்ளது.இதன் காரணமாக 18 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்கும் நிகழ்வு அதிகரித்து. செஞ்சிலுவை சங்கம் நடத்திய ஆய்வு ஒன்றிலேயே இது தெரிய வந்துள்ளது. அவர்கள் 11 மாவட்டங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.அவற்றுள் 5 மாவட்டங்களில் 18 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளைகளை திருமணம் முடித்துக்கொடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது.. அவற்றுள் மலையகத்திலேயே இது அதிகம் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Local News
மக்கள் பட்டினியில்; ரணிலிடம் நஷ்டஈடு கேட்டு சண்டையிடும் மொட்டு எம்பிக்கள்
Sun, 16 Oct 2022 09:26:38 +0530
மே 9ஆம் திகதி சம்பவத்தின்போது எரிக்கப்பட்ட தமது வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் அல்லது குறைந்த வட்டி வீதத்தில் வங்கிகளில் கடன் பெற வசதி செய்து தர வேண்டும் என்று மொட்டு கட்சி எம்பிக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதிக்கும் இவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிப்போதே இந்தக் கோரிக்கையை விடுத்தனர். சம்பவம் இடம்பெற்று 4 மாதங்கள் கடந்துள்ளன.ஆனால்,இன்னும் எமக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதேவேளை,அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன,விதுர விக்ரம,மஹிந்தானந்த அழுத்கமகே.இந்திக அனுருத்த,சிசிர ஜயக்கொடி உள்ளிட்ட 9 பேர் தமக்கு நஷ்டஈடு தேவை இல்லை என்றும் நாம் எமது வேலையைச் செய்துகொள்கிறோம் என்றும் அங்கு கூறினர். ஆனால்,ஏனையவர்கள் நஷ்டஈடு தேவை என்று கூறினர். மக்கள் பட்டினியால் வாடும் இந்த நிலையில்தான் இந்த எம்பிக்கள் அரசிடம் நட்டஈடு கேட்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Local News
கெபினட் அமைச்சர்களுக்கு எதிராக களமிறங்கும் இராஜாங்க அமைச்சர்கள் 
Sun, 16 Oct 2022 08:17:25 +0530
இராஜாங்க அமைச்சர்களுக்குரிய பொறுப்புக்கள் தொடர்ந்தும் பகிர்ந்தளிக்கப்படாமைக்கு இராஜாங்க அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடருமாக இருந்தால் எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தின்போது அந்தந்த அமைச்சர்களுக்குரிய நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்று அவர்கள் ரகசிய முடிவொன்றை எடுத்துள்ளார்கள் என்று அறிய முடிகிறது. பல இராஜாங்க அமைச்சர்களுக்கு பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் எதுவித பொறுப்புக்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர்கள் கூறுகின்றனர்.
Local News
கொழும்பை விட்டு ஓடும் மக்கள் 
Sun, 16 Oct 2022 07:45:52 +0530
வாழ்க்கைச் செலவீன அதிகரிப்பு காரணமாக அதிகமான மக்கள் இப்போது கொழும்பை விட்டு கிராமங்களை நோக்கிப் படை எடுக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில் நிமிர்த்தம்-கல்வி நிமிர்த்தம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக கொழும்பில் வாழ்ந்து வரும் வெளி ஊர் மக்களால் வாழ்க்கைச் செலவு  அதிகரிப்பைச் சமாளிக்க முடியவில்லை.இதனால் நிரந்தரமாக அவர்களின் ஊர்களுக்கே திரும்பி வருகின்றனர். கொழும்புக்குச் சென்றால்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நிலைதான் இவ்வளவு காலமும் இருந்து வந்தது.இப்போது அந்த நிலை மாறிவிட்டது.கொழும்புக்குச் சென்றால் வாழவே முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது.
Local News
சுதந்திர கட்சியை கைப்பற்ற ரகசியக் கூட்டம் 
Sat, 15 Oct 2022 17:48:09 +0530
அரசுடன் இணைந்துள்ள சுதந்திர கட்சி எம்பிக்கள் 9 பேருக்கு எதிராக அக்கட்சி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,அந்த 9 பேரும் ஒன்றிணைந்து இப்போது கட்சித் தலைமைக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சுதந்திர  கட்சியைக் கைப்பற்றி அதைப் பலப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பில் புதன் கிழமை பிற்பகல் சு.க முக்கியஸ்தர் ஒருவரின் கொழும்பு இல்லத்தில் இந்த 9 பேரும் ரகசியமாக ஒன்றுகூடிப் பேசியுள்ளனர். சு.கவில் அதன் தலைவர் மைத்ரிபால சிரிசேன,செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஷான் விஜயலால் ஆகிய மூவரே இப்போது எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Local News
தங்க நகைகள் அணிந்து வருவதால்  மாதாந்தம் 3 கோடி டொலர் நட்டம் 
Sat, 15 Oct 2022 09:01:46 +0530
வெளிநாடுகளில் இருந்து மோசடியான முறையில் தங்க நகைகள் அணிந்துகொண்டு வருவதால் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு 3 கோடி டொலர் இழப்பு ஏற்படுகிறது என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக இனி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். அரசின் வருமானத்தைப் பாதிக்கும்வகையில் தங்கம் நாட்டுக்குள் கடத்தப்படுகிறது.அதேபோல் நகைகளும் அணிந்து வரப்படுகின்றன. மோசடியானமுறையில் அதிகமான நகைகள் அணிந்து வருவதால் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு 3 கோடி அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படுகிறது. தற்போதையை பொருளாதார நிலைமையில் இது பெரும் தொகையாகும்.இது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
Crime Story
போதைக்கு பணம் வழங்க மறுத்த கர்ப்பிணி மனைவி: சுடுதண்ணீர் ஊற்றி கணவன் தாக்குதல் 
Wed, 29 Sep 2021 08:58:48 +0530
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான கணவனுக்கு மனைவி பணம் தர மறுத்ததால் அவர்மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளார் அவரது கணவன். கர்ப்பிணியான அப்பெண்மீது சுடுதண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தியதால் கண் பாதிக்கப்பட்டு அப்பெண் கொழும்பு கண் சிகிச்சை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவனுக்கு 23 வயது என்றும் மனைவிக்கு 20 வயது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us