Gossips
வெட்கித் தலை குனிந்த விமல் 
Mon, 14 Nov 2022 07:55:19 +0530
ஒரு தடவை மஹிந்த-விமல் உள்ளிட்ட குழுவினர்  கியூபா சென்றிருந்தார்கள். அவர்களை அழைத்துச்  செல்வதற்கு வாகனத் தொடர்  அணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்,அந்நாட்டுத் தலைவர்கள் தொடராக அனுப்பாது ஒவ்வொரு வாகனமாக அனுப்பினர்கள்.அதுவும் ஓரிரு நிமிடங்கள் இடைவெளியில்.. ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று  அவர்களிடம் கேட்டார் விமல். வரிசையாக அனுப்பினால் மக்கள் நினைப்பார்கள் நாம்தான் துன்பப்படுகிறோம்.அரசியல்வாதிகள் சுகமாக வாழ்கிறார்கள் என்று. அப்படி அவர்கள் எண்ணித் துன்பப்படுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றார்கள் . அப்போது எமது நாட்டு அரசியல்வாதிகளின் நிலையை யோசித்துப் பார்த்தார் விமல் .உள்ளார வெட்கப்பட்டு தலை குனிந்தாராம்.
Gossips
மிளகாய் காய வைக்கும் இடமாக  ஹம்பாந்தோட்டை ஞாபகார்த்த மண்டபம் 
Mon, 14 Nov 2022 07:48:44 +0530
ஓரிரு நாட்களுக்கு முன் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழு ஒன்றுக்கும் இடையில் நாடாளுமன்றில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அது அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான சந்திப்பு. அப்போது அந்தக் குழுவினர் பிரதி சபாநாயகரிடம் ஒரு கேள்வி கேட்டனர். ''ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ ஞாபகார்த்த மண்டபம் இப்போது மிளகாய் காய வைக்கும் இடமாகப் பாவிக்கப்படுகிறதாமே..;; இதைக் கேட்ட பிரதி சபாநாயகருக்கு ஒரே அதிர்ச்சி. ''இல்லை..இல்லை.அப்படி ஏதும் இல்லை.இது எதிர்க்கட்சிகள் பரப்பும் போலிப் பிரசாரம்...'' என்றார் அடித்துப் பிடித்துக்கொண்டு. அத்தோடு அங்கு வந்து பார்க்குமாறும் கூறினார். இதை அந்தக் குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.
Gossips
புறக்கோட்டைக்கு ஆடை வாங்கச் சென்ற கீதா 
Mon, 14 Nov 2022 07:46:37 +0530
பொதுவாக அரசியல்வாதிகள்-அமைச்சர்கள் சாதாரண மக்கள் செல்லும் இடங்களுக்குச் சென்று பொருட்கள் வாங்கமாட்டார்கள். அவர்கள் vip க்கள் லிஸ்ட்டில் அவர்களை சேர்த்துக்கொண்டு vipக்கள் ஏரியாவுக்கே பொருட்கள் வாங்கச் செல்வார்கள். ஜேவிபி எம்பிக்கள் மாத்திரமே சாதாரண மக்கள் செல்லும் கடைகளுக்குச் செல்வார்கள். ஆனால்,தான் இதற்கு விதிவிலக்கானவர் என்று  காட்டியுள்ளார் நடிகையும் இராஜாங்க அமைச்சருமான கீதா குமாரசிங்க. கடந்த வாரம் அவர் புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத் தெருவுக்குச் சென்று ஆடை வாங்கியுள்ளார். அந்தத் தெருவுக்குள் வாகனம் செல்ல முடியாது.இதனால் வாகனத்தை வேறோர் இடத்தில் நிறுத்திவிட்டு நடையில் சென்று கடை கடையாக ஏறி பொருட்கள் வாங்கியுள்ளார். அவரை அடையாளம் கண்ட வர்த்தகர்கள் அவரை நல்லமுறையில் கவனித்து அனுப்பியுள்ளனர்.அவரும் மக்களுடன் நற்பாகப் பழகித் திரும்பியுள்ளார். ஒருவேளை,தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைதான் அவரை அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்குமோ...?
Gossips
நைசாக நழுவிய மைத்திரி 
Mon, 14 Nov 2022 07:37:16 +0530
நவம்பர் 2 இல் கொழும்பில் நடத்தப்பட்ட அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தயாராக இருந்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அப்பபோதுதான் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் சிலர் சஜித்துக்கு எதிராக கூக்குரல் எழுப்பினர். இந்த நிலையில் மைத்திரி வந்தால் அவருக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்று அஞ்சினார் தயாசிறி ஜயசேகர. அப்போது தயாசிறி அங்குதான் நின்றார். உடனே மைத்திரிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து நிலைமை மோசம்.இப்போது வரவேண்டாம் என்றார் தயாசிறி. ''அப்பாடா..தப்பினேன்'' என்று பெருமூச்சு விட்டார் மைத்திரி.
Gossips
வெற்றிலை வைத்து கெஞ்சிக் கேட்டாலும் செய்யமாட்டேன் 
Mon, 14 Nov 2022 07:34:24 +0530
21 ஆவது திருத்தச் சட்டத்தின்படி 2.5 வருடங்களில் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். அப்படிச் செய்வீர்களா என்று மஹிந்தானந்த அழுத்கமகே ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றின்போது ஜனாதிபதியிடம் வினவியுள்ளார். சபையை கலைக்குமாறு நீங்கள் வெற்றிலை வைத்து கெஞ்சிக் கேட்டாலும் கலைக்கமாட்டேன்.பயப்புட வேண்டாம் என்று உறுதி வழங்கியுள்ளார் ஜனாதிபதி. அதுமட்டுமா இரட்டை பிரஜா உரிமை விவகாரம் தொடர்பில் காமினி லொக்குகே அதே சந்திப்பில் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில்,அந்தத் திருத்தம் நான் கொண்டு வந்ததல்ல.கோத்தாபய கொண்டு வந்தது என்று பதிலளித்துள்ளார்.
Gossips
மஹிந்தவின் வீட்டைக் கேட்கும் கோத்தா 
Mon, 14 Nov 2022 06:13:09 +0530
விஜேராமவில் அமைந்துள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் புனர்நிர்மாணம் செய்யப்படுகிறது. அதுவரை அவர் புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜனக பண்டாரவின்  உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார். பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு திருகோணமலைக்கு ஓடிய மஹிந்த திரும்பி வந்து தங்கியது இந்த வீட்டில்தான். மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் திருத்தப்பட்டு அந்த வீட்டுக்கு அவர் குடிபெயர்ந்ததும் இப்போது இருக்கும் இல்லத்தைத் தனக்குத் தருமாறு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். கோத்தா இப்போது இருப்பது மலலசேகர மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில். பல வீடுகள் அப்போது அவருக்காகத் தேடப்பட்டு இறுதியில் ஜனக பண்டாரவின் வீடுதான் பாதுகாப்பு எனக் கருதி அதை எடுத்துக்கொண்டார் மஹிந்த.
Local News
முட்டையை ரூ.50க்கு மேல் விற்றால் ஒரு லட்சம் ரூபா அபராதம்  
Tue, 08 Nov 2022 08:04:09 +0530
முட்டை ஒன்றின் விலையை ரூ.50க்கு மேல் அதிகரித்தால் ஒரு லட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுற்றிவளைப்பு நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகார சபையின் சட்டத்தரணி சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை,இது தொடர்பில் சுற்றிவளைப்பு எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்று முட்டை வியாபாரிகள் நுகர்வோர் அதிகார சபையின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்று அறிய முடிகிறது. எந்த அழுத்தத்துக்கும் அடிபணியாது சுற்றி வளைப்புத் தொடர்ந்து இடம்பெறும் என்று அதிகார சபையின் சட்டத்தரணி சாந்த் நிரியல்ல தெரிவித்துள்ளார்.
Crime Story
போதைக்கு பணம் வழங்க மறுத்த கர்ப்பிணி மனைவி: சுடுதண்ணீர் ஊற்றி கணவன் தாக்குதல் 
Wed, 29 Sep 2021 08:58:48 +0530
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான கணவனுக்கு மனைவி பணம் தர மறுத்ததால் அவர்மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளார் அவரது கணவன். கர்ப்பிணியான அப்பெண்மீது சுடுதண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தியதால் கண் பாதிக்கப்பட்டு அப்பெண் கொழும்பு கண் சிகிச்சை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவனுக்கு 23 வயது என்றும் மனைவிக்கு 20 வயது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us