Home / Gossips
Gossips
வெட்கித் தலை குனிந்த விமல் 
Mon, 14 Nov 2022 07:55:19 +0530
ஒரு தடவை மஹிந்த-விமல் உள்ளிட்ட குழுவினர்  கியூபா சென்றிருந்தார்கள். அவர்களை அழைத்துச்  செல்வதற்கு வாகனத் தொடர்  அணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்,அந்நாட்டுத் தலைவர்கள் தொடராக அனுப்பாது ஒவ்வொரு வாகனமாக அனுப்பினர்கள்.அதுவும் ஓரிரு நிமிடங்கள் இடைவெளியில்.. ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று  அவர்களிடம் கேட்டார் விமல். வரிசையாக அனுப்பினால் மக்கள் நினைப்பார்கள் நாம்தான் துன்பப்படுகிறோம்.அரசியல்வாதிகள் சுகமாக வாழ்கிறார்கள் என்று. அப்படி அவர்கள் எண்ணித் துன்பப்படுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றார்கள் . அப்போது எமது நாட்டு அரசியல்வாதிகளின் நிலையை யோசித்துப் பார்த்தார் விமல் .உள்ளார வெட்கப்பட்டு தலை குனிந்தாராம்.
மிளகாய் காய வைக்கும் இடமாக  ஹம்பாந்தோட்டை ஞாபகார்த்த மண்டபம் 
Mon, 14 Nov 2022 07:48:44 +0530
ஓரிரு நாட்களுக்கு முன் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழு ஒன்றுக்கும் இடையில் நாடாளுமன்றில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அது அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான சந்திப்பு. அப்போது அந்தக் குழுவினர் பிரதி சபாநாயகரிடம் ஒரு கேள்வி கேட்டனர். ''ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ ஞாபகார்த்த மண்டபம் இப்போது மிளகாய் காய வைக்கும் இடமாகப் பாவிக்கப்படுகிறதாமே..;; இதைக் கேட்ட பிரதி சபாநாயகருக்கு ஒரே அதிர்ச்சி. ''இல்லை..இல்லை.அப்படி ஏதும் இல்லை.இது எதிர்க்கட்சிகள் பரப்பும் போலிப் பிரசாரம்...'' என்றார் அடித்துப் பிடித்துக்கொண்டு. அத்தோடு அங்கு வந்து பார்க்குமாறும் கூறினார். இதை அந்தக் குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.
புறக்கோட்டைக்கு ஆடை வாங்கச் சென்ற கீதா 
Mon, 14 Nov 2022 07:46:37 +0530
பொதுவாக அரசியல்வாதிகள்-அமைச்சர்கள் சாதாரண மக்கள் செல்லும் இடங்களுக்குச் சென்று பொருட்கள் வாங்கமாட்டார்கள். அவர்கள் vip க்கள் லிஸ்ட்டில் அவர்களை சேர்த்துக்கொண்டு vipக்கள் ஏரியாவுக்கே பொருட்கள் வாங்கச் செல்வார்கள். ஜேவிபி எம்பிக்கள் மாத்திரமே சாதாரண மக்கள் செல்லும் கடைகளுக்குச் செல்வார்கள். ஆனால்,தான் இதற்கு விதிவிலக்கானவர் என்று  காட்டியுள்ளார் நடிகையும் இராஜாங்க அமைச்சருமான கீதா குமாரசிங்க. கடந்த வாரம் அவர் புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத் தெருவுக்குச் சென்று ஆடை வாங்கியுள்ளார். அந்தத் தெருவுக்குள் வாகனம் செல்ல முடியாது.இதனால் வாகனத்தை வேறோர் இடத்தில் நிறுத்திவிட்டு நடையில் சென்று கடை கடையாக ஏறி பொருட்கள் வாங்கியுள்ளார். அவரை அடையாளம் கண்ட வர்த்தகர்கள் அவரை நல்லமுறையில் கவனித்து அனுப்பியுள்ளனர்.அவரும் மக்களுடன் நற்பாகப் பழகித் திரும்பியுள்ளார். ஒருவேளை,தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைதான் அவரை அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்குமோ...?
நைசாக நழுவிய மைத்திரி 
Mon, 14 Nov 2022 07:37:16 +0530
நவம்பர் 2 இல் கொழும்பில் நடத்தப்பட்ட அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தயாராக இருந்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அப்பபோதுதான் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் சிலர் சஜித்துக்கு எதிராக கூக்குரல் எழுப்பினர். இந்த நிலையில் மைத்திரி வந்தால் அவருக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்று அஞ்சினார் தயாசிறி ஜயசேகர. அப்போது தயாசிறி அங்குதான் நின்றார். உடனே மைத்திரிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து நிலைமை மோசம்.இப்போது வரவேண்டாம் என்றார் தயாசிறி. ''அப்பாடா..தப்பினேன்'' என்று பெருமூச்சு விட்டார் மைத்திரி.
வெற்றிலை வைத்து கெஞ்சிக் கேட்டாலும் செய்யமாட்டேன் 
Mon, 14 Nov 2022 07:34:24 +0530
21 ஆவது திருத்தச் சட்டத்தின்படி 2.5 வருடங்களில் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். அப்படிச் செய்வீர்களா என்று மஹிந்தானந்த அழுத்கமகே ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றின்போது ஜனாதிபதியிடம் வினவியுள்ளார். சபையை கலைக்குமாறு நீங்கள் வெற்றிலை வைத்து கெஞ்சிக் கேட்டாலும் கலைக்கமாட்டேன்.பயப்புட வேண்டாம் என்று உறுதி வழங்கியுள்ளார் ஜனாதிபதி. அதுமட்டுமா இரட்டை பிரஜா உரிமை விவகாரம் தொடர்பில் காமினி லொக்குகே அதே சந்திப்பில் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில்,அந்தத் திருத்தம் நான் கொண்டு வந்ததல்ல.கோத்தாபய கொண்டு வந்தது என்று பதிலளித்துள்ளார்.
மஹிந்தவின் வீட்டைக் கேட்கும் கோத்தா 
Mon, 14 Nov 2022 06:13:09 +0530
விஜேராமவில் அமைந்துள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் புனர்நிர்மாணம் செய்யப்படுகிறது. அதுவரை அவர் புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜனக பண்டாரவின்  உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார். பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு திருகோணமலைக்கு ஓடிய மஹிந்த திரும்பி வந்து தங்கியது இந்த வீட்டில்தான். மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் திருத்தப்பட்டு அந்த வீட்டுக்கு அவர் குடிபெயர்ந்ததும் இப்போது இருக்கும் இல்லத்தைத் தனக்குத் தருமாறு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். கோத்தா இப்போது இருப்பது மலலசேகர மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில். பல வீடுகள் அப்போது அவருக்காகத் தேடப்பட்டு இறுதியில் ஜனக பண்டாரவின் வீடுதான் பாதுகாப்பு எனக் கருதி அதை எடுத்துக்கொண்டார் மஹிந்த.
மஹிந்தவின் பணம் கொள்ளை:  சிக்கியது இப்படித்தான் 
Sun, 30 Jan 2022 10:58:21 +0530
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் வங்கிக்கணக்கில் இருந்து 3 கோடி ரூபா பணம் திருடப்பட்டமை எப்படி என்று தெரியுமா? ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் மஹிந்தவின் பெயரிலான  ATM அட்டை ஒன்றின் ஊடாக 1.5 லட்சம் ரூபாவுக்கு ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. அந்த ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கணக்கை பரிசோதித்தபோது இது தெரிய வந்தது.அவர் மஹிந்தவின் நண்பன். இதனால் மஹிந்தவிடம் இதுபற்றி விசாரித்தார். அப்போது தான் அப்படி ஆடைகள் எவையும் கொள்வனவு செய்யவில்லை என்றார் மஹிந்த.பின்னர் வங்கிக்கணக்கை சோதித்துப் பார்த்தார் மஹிந்த.3 கோடி ரூபா அதில் இருந்து செலவழிக்கப்பட்டமை தெரியவந்தது. அதன்பின் மேற்கொண்ட விசாரணையில் அவ்வாறு செலவழித்தது மஹிந்தவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் என்பது தெரிய வந்தது.
அவரின் பெயரைச் சொன்னதால் பொங்கி எழுந்த கீதா: பெறமுனவின் கூட்டத்தில் நடந்த கூத்து......!! 
Sat, 11 Dec 2021 11:33:29 +0530
கடந்த சனிக்கிழமை 4 ஆம் திகதி பொதுஜன பெறமுண எம்பிக்களின் கூட்டம் ஒன்று அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் பட்ஜட்பற்றி அங்கு பேசப்பட்டது.அப்போது கீதா குமாரசிங்க கருத்துக் கூறினார். பொதுஜன பெரமுனவிற்காகத் தான் கடுமையாக உழைத்ததாகவும் இருந்தும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டடுள்ளது என்றும் அவர் கூறினார். அப்போது பின்வரிசையில் இருந்து ஒரு சத்தம் வந்தது.அது லொஹான் ரத்வத்த. ''what about ............................? என்று ஒரு முன்னாள் அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு கேட்டார். அவ்வளவுதான்.பொத்திக்கொண்டு கோபம் வந்தது கீதாவுக்கு. what are you talking? என்று கூறிக்கொண்டு ஆசனத்தில் இருந்து எழுந்து லொஹான் இருக்கும் பக்கம் நோக்கி செல்லத் தொடங்கினார் கீதா. இதைக் கண்ட லொஹான் எழுந்து நைசாக அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அவர் குறிப்பிட்ட அந்த சிரேஷ்ட அரசியல்வாதி கீதாவுடன் மிக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபை புறக்கணிப்பு: நாடாளுமன்றத்துக்குச் சென்று அமைச்சர்களிடம் வினவிய ஜனாதிபதி 
Sat, 11 Dec 2021 10:21:15 +0530
கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தைப் புறக்கணித்ததை நாம் அறிவோம்  அந்தச் சமயம் நாடாளுமன்றுக்குச் சென்றார் ஜனாதிபதி.அது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக. அவரை அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன,ஜோன்சன் பெர்னாண்டோ,ரோஹித அபயகுணவர்தன,மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் ஜயந்த கெட்டகொட எம்பி ஆகியோர்  வரவேற்றனர். அவர் நேராக ஜனாதிபதி அலுவலகத்துக்குள் சென்றார். ''உள்ளே என்ன செய்தி'' அவர்களிடம் வினவினார் ஜனாதிபதி. ''ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் சபை அமர்வுகளை புறக்கணித்துவிட்டார்கள் சேர்.ஜோன்சடன் மினிஸ்டர் மனுஷ நாணயக்காரவுக்கு அடிக்கப் போனார் என்று சொல்கிறார்கள்''என்றனர். ''இல்லை..இல்லை..அவர்கள் வருவார்கள்.பிரச்சினை ஏற்படுத்த வேண்டாம்''என்றார் ஜனாதிபதி. சம்பவம் ஒன்றும் நடக்கவில்லை.கடந்த நாட்களில் இதைவிட மோசமான சம்பவங்கள் நடந்தன.அப்போதெல்லாம் அவர்கள் சபையை புறக்கணிக்கவில்லை என்றார் மஹிந்தானந்த. அவர்கள் சபைக்கு வராவிட்டாலும் நாடாளுமன்றுக்கு வருகிறார்கள் சேர் என்றார் ஜோன்சன். ''ஓம் சேர்.சரியாக சாப்பாடு நேரத்தில் வருகிறார்கள்.நேராக கேன்டீன் சென்று சாப்பிட்டிவிட்டுப் போகிறார்கள்'' என்றார் மஹிந்தானந்த. இவ்வாறு 10 நிமிடங்கள் இதைப்பற்றி பேசினர்.பின்னர் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் அறைக்குச் சென்றார் ஜனாதிபதி.              
அமைச்சர்களை வெளியே நிறுத்திவிட்டு மஹிந்த-ரணில் ரகசியப் பேச்சு 
Mon, 15 Nov 2021 16:42:23 +0530
கடந்த புதன் கிழமை ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு இடையில் ரகசிய சந்திப்பு ஒன்று நாடாளுமன்றில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. மஹிந்தவுடன் வந்த அமைச்சர்கள்,எம்பிக்கள் ஆகியோர் அலுவலகத்துக்கு வெளியே நிற்க இருவர் மட்டும் அறைக்குள் 10 நிமிடங்கள் உரையாடியுள்ளனர். அன்றைய தினம் மஹிந்தவை சந்திப்பதற்குத் தயாராக வந்திருந்தார் ரணில்.அவர்கள் இருவரும் அன்று சபையில். மஹிந்த சபையில் இருந்து வெளியேறும்வரைக் காத்திருந்தார் ரணில்.மஹிந்த வெளியேற,ரணிலும் வெளியேறு சுற்றி வந்து மஹந்தவை சந்தித்தார். ''உங்களைத்தான் சந்திக்க வந்தேன்'' என்றார் ரணில். ''அப்படியா..வாருங்கள் அலுவலகத்துக்குச் சென்று பேசுவோம்'' என்று கூறி ரணிலை அழைத்துச் சென்றார் மஹிந்த. மஹிந்தவுடன் அமைச்சர்கள்,எம்பிக்கள் பட்டாளமே இருந்தது.அலுவலகத்தை நெருங்கியதும் அவர்கள் உள்ளே போகவில்லை.வெளியே நின்றுவிட்டார்கள். அவர்களுக்குத் தெரியும் அது ரகசிய பேச்சு என்று.அவர்கள் அனைவரும் வெளியே நிற்க இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளனர். அதன் பின்னர் ரணில் வெளியேறிச் சென்றுவிட்டார்.ஏதோவொரு முக்கியமான தகவலை ரணில் வழங்கிவிட்டுப் போயுள்ளார் என்று ஊகிக்கிறது தகவல் அறிந்த வட்டாரம்.
எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி: நிறுத்தி வைக்கப்பட்டது இப்படித்தான் 
Sun, 30 May 2021 08:05:12 +0530
கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் பின்வரிசை எம்பிக்களுடன் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாடல் ஒன்றை மேற்கொண்டார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ. அப்போது அவர்களுடன் பேசப்பட்ட விடயங்களுள் எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி முக்கியமான விடயமாகும். எம்பிக்கள் அனைவருக்கும் குறிப்பாக,புதிய எம்பிக்களுக்கு வாகனங்கள் தேவைதான்.என்றாலும்,இப்போதைய நிலைமையில்,வாகனங்களை இறக்குமதி செய்வது சரி இல்லை.கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய இந்த சூழலில் வாகனங்களை இறக்குமதி செய்வது எமது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று அந்த எம்பிக்கள் கூறினர். மஹிந்தவும் அதை ஏற்றுக்கொண்டு அமைச்சரவை கூட்டத்துக்குச் சென்றார்.அங்கு இந்த விடயத்தைக் கூறினார். ''இதை தற்போதைக்கு நிறுத்தி வைப்போம்.கொரோனா நிலைமை சரி வந்ததும் தொடங்குவோம்'' என்று மஹிந்த அமைச்சரவையில் கூறினார். இதை முழுமையாக ஏற்றுக்கொண்ட அமைச்சரவை உறுப்பினர்கள் இதை நிறுத்தி வைப்பதற்காக முழு அனுமதியை வழங்கினர். எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.  
இம்ரான் கானுக்கு ஏன் கோட்டாபாய சாப்பாடு போடவில்லை தெரியுமா?
Mon, 01 Mar 2021 11:38:04 +0530
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வந்தபோது அவருக்கு பிரதமர் மஹிந்த மற்றும் நாமல் ஆகியோர் விருந்துபசாரம் நடத்தினர். ஆனால்,ஜனாதிபதி கோட்டாபய சாப்பாடு போடவில்லை.இது இப்போது அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்  இலங்கை வந்தபோது அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனியாகவும்,பிரதமர் ரணில் தனியாகவும் விருந்து வைத்தனர். அதேபோல்,சந்திரிகா காலத்தில் முஸர்ரப் இலங்கை வந்தபோதும் ஜனாதிபதி தனியாகவும் பிரதமர் தனியாகவும் விருந்துவைத்து கௌரவப்படுத்தினர். ஆனால்,இம்ரான்கானுக்கு ஜனாதிபதி சாப்பாடு போடவில்லை.இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி இப்படி நடந்துகொண்டுள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ரணிலின் புரியாணி பார்ட்டிக்குப் போனாரா சஜித்?
Mon, 01 Mar 2021 11:08:54 +0530
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் அக்கட்சி உறுப்பினர்கள் கடந்த வாரம் எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தார் சஜித் பிரேமதாசா.''நீங்கள் ரணிலின் புராணி பார்டிக்குப் போகல்லையா'' என்று கேட்டார் ஏ.சி.அளவத்துக்கொட. அதற்கு பதிலளித்த சஜித் ''அவருடன் சாப்பாட்டுக்குப் போகவேண்டிய தேவை எனக்கில்லை.மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை போடுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருக்கு''என்றார். அப்போது குறுக்கிட்ட நலின் பண்டார ''நீங்கள் ரணிலுடன் பேசுவதுபோல் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் உலாவுகிறதே'' என்று கேட்டார். அது உண்மைதானா என்று இன்னொரு தடவை உத்துப்பாருங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார் சஜித். 
இம்ரான் கானின் இலங்கை விஜயம்:சுவாரசியமான சம்பவங்கள் சில....
Mon, 01 Mar 2021 10:12:23 +0530
### பெப்ரவரி 23 ஆம் திகதி பிற்பகல் 4.10 இற்குத்தான் இம்ரான்கான் இலங்கை வந்து சேர்ந்தார். ### அவர் இந்திய வான் பரப்பைத் தவிர்த்து அரேபிய கடலின் ஊடாகவே வந்தார்.இந்தியா அதன் வான் பரப்பை வழங்கியபோதும் பாதுகாப்புக் கருதி அதை அவர் தவிர்த்திருந்தார்.  ### அவருக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான சந்திப்பின்போது மஹிந்த புலிகளை கொன்றொழித்தமைக்காக மஹிந்தவை புகழ்ந்து தள்ளினார் இம்ரான்.பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். ### அதேவேளை,இறுதி யுத்தத்தின்போது அப்போதைய பாக்.பிரதமர் பேர்வஸ் முஷாரப் இலங்கைக்கு வழங்கிய யுத்த உதவிகளை மஹிந்த நினைவுகூர்ந்தார். ### 1996 இல் இலங்கை கிரிக்கட் அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது பாகிஸ்தான் ரசிகர்களும் இலங்கைக்கே ஆதரவு வழங்கினர் என்றார் இம்ரான். ### ஆம்,அவர்கள் இலங்கை தேசிய கொடியை ஏந்தி ஆதரவு தெரிவித்தனர் என்று சொன்னார் மஹிந்த. ### இதனைத் தொடர்ந்து இம்ரானுக்கும் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 24 ஆம் திகதி இடம்பெற்றபோது,வறுமை ஒழிப்பு தொடர்பாக கோட்டா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டினார் இம்ரான். ### அன்றைய தினம் பகல் சாப்பாட்டை சங்கிரில்லா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ. ### நாமல் ராஜபக்ஸ இம்ரானை அழைத்துக்கொண்டு சாப்பாட்டு அறைக்குச் செல்லும்போது தனக்கு நன்கு பழக்கமான முகம் ஒன்று தென்பட்டது.அது அர்ஜுன ரணதுங்க. ### உடனே நின்று '' அர்ஜுன எப்படி இருக்கிறீங்க.இப்ப என்ன செய்றீங்க'' என்று விசாரித்தார் இம்ரான். ### ''நானும் அரசியலில்தான் இருக்கிறேன்.நான் எம்பி.இந்த முறை தெரிவாகவில்லை'' என்று கூறினார் அர்ஜுன. ### ''நான் உங்களிடம் அப்போது சொன்னேன் அல்லவா.புதுக் கட்சி ஒன்றை உருவாக்கி அரசியலில் இறங்கப்போகிறேன் என்று.அதனால்தான்,நான் இப்போது பிரதமராகியுள்ளேன்.நீங்களும் அப்படி கட்சி ஒன்றை உருவாக்கி இருக்கலாமே'' என்றார் இம்ரான். ### ''இல்லை.நான் அப்படிச் செய்யவில்லை.என் அப்பா அரசியலுக்காக அதிகம் தியாகம் செய்திருக்கிறார்.அவர் வழியிலேயே நான் வந்துவிட்டேன்.''-என்றார் அர்ஜுன. ### பிறகு சாப்பாடு முடிந்ததும் அர்ஜுன இம்ரான் கானிடம் போய் '' அன்று எம்முடன் விளையாடிய கிரிக்கட் வீரர்கள் உங்களைக் காண வந்துளளர்கள்.'' என்று கூறி அவர்கள் நிற்கும் இடத்தைக் காட்டினார். ### இம்ரான் கான் அவர்களைக் கண்டு பூரித்துப்போனார்.''ஓ மை கோட்.எனது நண்பர்களே'' என்று கூறிக்கொண்டு அவர்களிடம் சென்றார் இம்ரான். ### அங்கே முன்னாள் வீரர்கள்.சிதத்,ரஞ்சன்,ரோயி,அசந்த,சங்ககார,வாஸ்,முரளி உள்ளிட்டோர் நின்றனர்.அவர்களுடன் சிறிது நேரம் சிரித்துப் பேசி மகிழ்ந்தார்.அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ### அப்போது இம்ரான் அர்ஜுணவைப் பார்த்து ''விரும்பிய நேரம் என்னோடு பேசுங்கள்.எனது தொலைபேசி இலக்கத்தை இவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று அவரது உதவியாளரைக் காட்டி கூறினார் இம்ரான். ### உதவியாளர் அந்த நேரமே அர்ஜுனவுக்கு இம்ரானின் இலக்கத்தைக் கொடுத்து அர்ஜுனாவின் இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார். ### அர்ஜுனவின் சகோதரரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை மூன்று தடவைகள் சந்தித்தார் இம்ரான்.கட்டுநாயக்க விமான நிலையத்தில்,அலரிமாளிகையில்,விருந்துபசாரத்தில். ### அலறி மாளிகையில் வைத்து பிரசன்னவை இம்ரானுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் மஹிந்த.இவர்தான் கிரிக்கட் வீரர் ரணதுங்கவின் சகோதரர் என்றார். ### ''ஓ ..நான் பார்த்தேன்.அதே அவரது தோற்றத்தில் இருக்கிறீர்.இன்னும் ரணதுங்கக்கள் அரசியல் இருக்கிறீர்களா''? என்று கேட்டார் இம்ரான். ### ஆம் என்றார் பிரசன்ன. ### எதிர்க்கட்சியில் யார்,அரசில் யார் என்று ஆவலுடன் கேட்டார் இம்ரான்.அவரும் பதிலளித்தார். ### ''நான் அரசியலுக்கு வந்தபோது எனது கிரிக்கட் ரசிகர்கள் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. அவர்கள் வாக்குரிமை பெறும்வரை நான் பொறுமையாக இருந்தேன்.இப்போது வென்றுவிட்டேன்.தனி கட்சி ஒன்றை உருவாக்குமாறு நான் அப்போதே அர்ஜுனவிடம் கூறினேன்.'' என்றார் இம்ரான்.                    
கொரோனா வந்ததன் பின் அம்மாவை டிவியில்தான் பார்த்தேன்.பவித்ராவின் மகள்
Mon, 08 Feb 2021 09:46:51 +0530
இலங்கைக்குள் கொரோனா நுழைந்து ஒரு வருடமாகிறது.கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தீவிரமாக ஈடுபட்டுத் திரிவதால் அவரை நேரில் காண்பது மிகவும் கஷ்டம் என்று அவரது மகள் தெரிவிக்கின்றார்.. அநேகமாக,அவரை தொலைக்காட்சியில்தான் அதிகமாக காண்பாராம் அவர்.அமைச்சர் அமைச்சில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு நள்ளிரவு 12 மணியைத் தாண்டிவிடும்.நாங்கள் தூங்கிவிடுவோம்.அப்போதுதான் அம்மா வருவார். நாங்கள் எழும்புவதற்கு முன் அவர் அமைச்சுக்கு சென்றுவிடுவார் என்று அவர் கூறியுள்ளார்.பவித்ரா இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
தனிமைப்படுத்தல் விருதுக்கு தகுதியுடையவர் இந்த அமைச்சர் 
Sat, 30 Jan 2021 10:11:35 +0530
எந்த வகையிலும் கொரோனா வைரஸிடம் சிக்கிவிடக்கூடாது என்பதில் கடும் உறுதியாக உள்ளாராம் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க. அவர் தனிமைப்படுத்தல் விதிகளை நூறு வீதம் பேணி கொரோனா வைரஸிற்கு தண்ணி காட்டி வருகிறார் என்று அவரது வட்டாரம் தெரிவிக்கின்றது. இரண்டு தடவைகள் தன்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகிறார் அவர். நுவரெலியா,அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதும் அவருடன் பழகிய சி.பி.உடனே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். அடுத்து அமைச்சர்கள் பவித்ராவுக்கும் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா தொற்றியது.அவர்களுடனும் இவர் பழகி இருந்தார்.இதனால் இரண்டாவது தடவையாகவும் தன்மைப்படுத்தலுக்கு உள்ளானார். இவ்வாறு வீழ்ந்து வீழ்ந்து நூறு வீதம் தனிமைப்படுத்தல் விதிமுறையை பின்பற்றி வருகிறார் சி.பி.இதனால் தனிமைப்படுத்தல் விருதுக்கு தகுதியுடையவர் இந்த அமைச்சர் என்கிறார்கள் அவரது அரசியல் நண்பர்கள்.
அப்பம் உண்பற்குத் தயங்கிய நாமல்! ஏன் தெரியுமா?
Sat, 26 Dec 2020 08:53:52 +0530
இளம் உற்பத்தியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக கண்காட்சி  ஒன்றை அமைச்சர்கள் நாமல் ராஜபக்ஸ மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் அண்மையில் கொழும்பில் திறந்து வைத்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வர்த்தக கூடாரங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.அங்கு ஒரு கூடாரத்தில் 2 பெண்கள் அப்பம் சுட்டுக்கொண்டு இருந்தார்கள்.அவர்களிடம் சென்று அமைச்சர்கள் இருவரும் பேச்சுக் கொடுத்தனர். அவர்கள் நாமலின் மனைவியின் ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.நான் நாளை மனைவியுடன் ஊருக்கு வரவவுள்ளேன் என்று நாமல் கூறினார். அப்போது அந்த பெண்கள் இருவரையும் அப்பம் தின்னுமாறு கூறினர். நாமலுக்கு ஒரே தயக்கம்.ஏன் தெரியுமா?ஏற்கனவே மைத்திரி மஹிந்தவுடன் சேர்ந்து அப்பம் உண்டுவிட்டு பல்டி அடித்த கதை ஒன்று உண்டல்லவா.அது ஞாபகத்துக்கு வந்ததும்தான் அவர் அப்பம் தின்ன தயங்கினார். '' அப்பம் என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்ணவும் முடியாத மறுக்கவும் முடியாத உணவு'' என்றார் பந்துல அந்த பெண்களை பார்த்து.-அந்த வரலாற்றை நினைவூட்டி.. ''அப்படியென்றால் ஒன்றாகவே உண்போம்.அரசை விட்டு வெளியேறுவதென்றால் ஒன்றாகவே வெளியேறுவோம்''-என்றார் நாமல் அப்போது. ''நல்லது.நான் வெளியேறுவதென்றால் நாட்டை மீட்டெடுத்த வீரனின் மகனோடுதான் வெளியேறுவேன்'' என்று கூறிவிட்டு அப்பத்தை உண்ணத் தொடங்கினார் பந்துல. பிறகு நாமலும் சரியென்று கூறிக்கொண்டு உண்ணத் தொடங்கினார். 
Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us