Home / World News
World News
பணக்காரர் பட்டியலில் அதானி முன்னிலையில்: பின்னுக்குச் சென்றார் முகேஷ் அம்பானி 
Fri, 26 Nov 2021 10:17:06 +0530
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மட்டும் அல்லாமல் ஆசிய பணக்காரர்கள் பட்டியலிலும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி நீண்ட காலமாகப் போட்டிப்போட்டும் வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் தத்தம் தலைமை வகிக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு அடிப்படையில் இன்று முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார். ப்ளூம்பெர்க் தளத்தின் தரவுகள் அடிப்படையில் முகேஷ் அம்பானி 91 பில்லியன் டாலருடனும், கௌதம் அதானி 88.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்தாலும் ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீட்டைக் கணக்கிடும் போது முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார்.
விமான வடிவில் மிதக்கும் படகு: தந்தை-மகன் அசத்தல் 
Fri, 26 Nov 2021 09:37:16 +0530
கேரளாவில் தந்தையும் மகனும் சேர்ந்து விமான வடிவில் மிதக்கும் படகு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.இதற்கு அவர்கள் பயன்படுத்தி இருப்பது கார் ஒன்றின் எஞ்ஜினையாகும்.சுற்றுலாவாசிகளைக் கவரும் நோக்கிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்களில் ஒன்றான கொச்சியைச் சேர்ந்தவர் ஷாபெல் டி-சோஸா.இவர் உலோக மேற்கூரை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.இவரது மகன் காட்சன் பொறியியல் பட்டதாரி ஆவார். இருவரும் இணைந்தே மிதக்கும் படகை அமைத்துள்ளனர். இருவரும் இணைந்து அண்மையில் கடல் விமானம் (seaplane) ஒன்றை உருவாக்கினர்.இதன் வெற்றியைத் தொடர்ந்தே தற்போது இந்தப் படகை உருவாக்கி இருக்கின்றனர். இதில் 12 பேர் வரை பயணிக்க முடியும்.இந்தப் படகைத் தொடர்ந்து சுமார் 50 பேர் அமரக்கூடிய மிதக்கும் உணவகத்தையும் உருவாக்க மகன்-தந்தை ஜோடி திட்டமிட்டிருக்கின்றது.
காஸா மீதான கட்டுப்பாடு:தளர்த்துகிறது இஸ்ரேல்:இன்று முதல் நடைமுறை 
Fri, 25 Jun 2021 10:52:25 +0530
இஸ்ரேலின் புதிய அரசு உதயமானதைத் தொடர்ந்து இஸ்ரேல் இதுவரை விதித்திருந்த காஸா மீதான சில தடைகளை நீக்குகிறது. அதில் முக்கியமாக மீன் பிடி மற்றும் தொழில்சாலைகளுக்கான மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல் அடங்குகிறது. காஸாவில் இருந்து மீன் பிடிக்கும் கடல் எல்லை இன்று முதல் 6 கடல் மைலில் இருந்து 9 கடல் மைல் வரை விஸ்தரிக்கப்படுகிறது. அதேபோல்,தொழில்சாலைகளுக்கான மூலப்பொருட்களை வெளியிடங்களில் இருந்து கரீம் சலோம் என்ற இஸ்ரேல்-காஸா எல்லையின் ஊடாக காஸாவுக்குள் எடுத்துச் செல்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தேவையான மூலப்பொருட்களை இஸ்ரேலில் இருந்தே கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்படுறது.
ஒரே நேரத்தில் 2000  பேர் தொழலாம்: அயோத்தியில் புதிய பள்ளிவாசல்: 300 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையும்!
Wed, 26 May 2021 08:59:35 +0530
ஒரே நேரத்தில் 2000 பேர் தொழக்கூடிய விசாலமான பள்ளிவாசல் ஒன்று அயோத்தியில் அமைக்கப்படவுள்ளது.கூடவே 300 படுக்கைகளைக்கொண்ட வைத்தியசாலை ஒன்றும் கட்டப்படவுள்ளது. அயோத்தி பாபர் மஸ்ஜித் வழக்கில் அந்த பள்ளிக்கு பதிலாக புதிதாக பள்ளிவாசல் அமைப்பதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்கமைய மாநில அரசு பாபர் மஸ்ஜித் அமைந்துள்ள இடத்தில் இருந்து 24 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம் வக்பு சபைக்கு வழங்கியது. அதில் மேற்படி பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓரிரு நாட்களில் போர் நிறுத்தம் 
Thu, 20 May 2021 10:30:04 +0530
ஓரிரு நாட்களில் ஹமாஸ்-இஸ்ரேலிடையே போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்று ஹமாஸ் அரசியல் பிரிவு அதிகாரி மௌஸா அபு மர்சூக் லெபனான் தொலைக்காட்சியான அல்-மயதீன் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக பல தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் ஓரிரு நாட்களில் வெற்றி பெரும் என தான் நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார். ஆனால்,இப்போது வரைக்கும் இரு தரப்பிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டே செல்கின்றன என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தமது இலக்கை எட்டும்வரை போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் தாக்குதல் இனவாதம் கொண்டது: தென் ஆபிரிக்க ஜனாதிபதி கண்டனம் 
Thu, 20 May 2021 09:31:33 +0530
கஸாமீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா வன்மையாகக் கண்டித்துள்ளார். பலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அணைத்து உரிமைகளும் உள்ளன.அதை இஸ்ரேலால் தடுக்க முடியாது என்று அவர் பிரான்ஸ் நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். அந்த மக்களின் எல்லா வகையான உரிமைகளையும் மறுத்துவிட்டு அவர்கள்மீது குண்டு போட்டு அவர்களை அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.இதை இஸ்ரேல் உடன் நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
100 வருட பழமையான பள்ளிவாசலை இடித்து ஆற்றுக்குள் தள்ளிய பாஜக!
Wed, 19 May 2021 20:25:01 +0530
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் பரபங்கி மாவட்டத்தில் அமைந்திருந்த 100 வருடம் பழமையான பள்ளிவாசல் ஒன்றை அரச நிர்வாகிகள் இடித்துள்ளனர். பாஜக சார்பு இனவாத சிந்தனைகொண்ட அரச நிவாகிகள் இதை இடித்துள்ளனர் என்று அப்பகுதி முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பள்ளிவாசல் இடிப்பதை அப்பகுதி முஸ்லிம்கள் தடுப்பார்கள் என்பதற்காக நூற்றுக்கணக்கான பொலிஸாரை பகுதி முழுவதும் பாதுகாப்பில் நிறுத்திவிட்டே இந்தப் பள்ளிவாசலை இடித்துள்ளனர். இதை எதிர்த்த 30 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முழு பகுதியையும் அச்சுறுத்தி அடக்கிவிட்டே பள்ளியை பிடித்துள்ளனர். இடிக்கும்போது மக்கள் வீடுகளின் ஜன்னல்களைத் திறப்பதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்துக்குத் தடையாக இருக்கும் சட்டவிரோதக் கட்டடம் என்று தெரிவித்தே இதைத் தகர்த்துள்ளனர்.தகர்த்த சில சிதைவுகளை ஆற்றுக்குள் தள்ளியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டு வரும் உத்தரப்பிரதேசத்தின் பாஜக முதல்வர் யோகி ஆதித்யாவின் உத்தரவின்பேரிலேயே இவ்வாறான அநியாயங்கள் இடம்பெறுகின்றன.         
கூகுள் நிறுவனத்தின் யூத பணியாளர்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவு: இஸ்ரேலை கண்டிக்குமாறு சுந்தர் பிச்சையிடம் கோரிக்கை 
Wed, 19 May 2021 19:29:14 +0530
கசாமீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாமல் யூதர்களே இஸ்ரேலுக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் யூத இனத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் இஸ்ரேலை கடுமையாகக் கண்டித்துள்ளனர். கூகுள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக இஸ்ரேலை கண்டிக்க வேண்டும் என்று அவர்கள் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர்பிச்சையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 250 இற்கும் மேற்பட்ட யூத ஊழியர்கள் கையெழுத்திட்டு அந்தக் கோரிக்கை கடிதத்தை சுந்தர் பிச்சையிடம் கையளித்துள்ளனர். 
மேற்கு வங்கத்தில் 42 முஸ்லிம் MLA க்கள் தெரிவு 
Tue, 04 May 2021 19:06:28 +0530
292 ஆசனங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்ட சபைக்கு 42 பேர் முஸ்லிம் MLAக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முதலவர் மம்தா பேனர்ஜி 42 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கி இருந்தார்.அவர்களுள் ஒருவரைத் தவிர 41 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.மேலும் ஒரு முஸ்லீம் வேட்பாளர் வேறு ஒரு கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டார். மம்தாவின் கட்சியில் வெற்றி பெற்ற 41 முஸ்லிம்களுல் ஹுமாயுன் கபீர் என்ற பொலிஸ் ஆணையாளர் ஒருவரும் அடங்குகிறார்.  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் மூவரைக் கைது செய்து பரபரப்பாகப் பேசப்பட்டவர் அவர்.இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே பதவியை இராஜினாமா செய்தார்.வெற்றியும் பெற்றார். அதேவேளை பாஜகவில் 77 பேர் தெரிவானபோதும் அதில் ஒருவரும் முஸ்லிம்கள் இல்லை. மேலும்,அசாருதீன் உவைஸ் 5 வேட்பாளர்களை களமிறக்கி இருந்தார்.அனைவரும் தோல்வியடைந்துவிட்டனர். இந்தத் தேர்தலில் 42 முஸ்லிம்கள் வெற்றிபெற்றபோதிலும் 2016 மற்றும் 2011 தேர்தலை ஒப்பிடும்போது இது வீழ்ச்சியாகும்.அந்தத் தேர்தல்களில் முறையே 56 மற்றும் 59 முஸ்லிம்கள் தெரிவாகி இருந்தனர். 2011 இல் 59 2016  இல் 56 2021 இல் 42
ஸ்டாலின் முதல்வர்: நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்
Mon, 03 May 2021 20:47:09 +0530
ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பரமக்குடியைச் சேர்ந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக பரமக்குடி தாலுகா பொதுவக்குடியை பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார். இதையடுத்து அவர் முத்தாலம்மன் கோவிலில் தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். தற்போது அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விவேக்கின் மரணத்துக்கு இதுதான் காரணமா?
Sat, 17 Apr 2021 09:44:40 +0530
நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தமை பலரிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அவர் கொரோனா தடுப்பூசி ஏற்றியமைதான் அந்த மாரடைப்புக்குக் காரணமா என்ற கேள்வி இப்போது எல்லோர் மனங்களிலும் எழத் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்தான் விவேக் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.அத்தோடு,ஏனையவர்களை போடுமாறு அவர் பிரசாரமும் செய்தார்.இந்த நிலையில்தான் அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார். அந்தக் கொரோனா தடுப்பூசிதான் காரணமோ என்று எல்லோரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.மேலும்,ஏற்கனவே இந்தத் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பில் தமிழக அரசு உடன் விளக்கம் தர வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
16 ஆவது ஆண்டாக நோன்பு நோற்கும் திருமாவளவன்... 
Fri, 16 Apr 2021 14:35:36 +0530
ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் நோன்பு நோற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இம்முறையும் 5 நாட்கள் நோன்பு நோற்கின்றார். கடந்த ஆண்டு அவர் 2 நாட்கள் மட்டுமே நோன்பு வைத்த நிலையில் இந்த வருடம் 5 நாட்கள் நோன்பு நோற்கின்றார். இத்தோடு சேர்த்து அவர் 16 ஆவாது ஆண்டாக நோன்பு நோற்கின்றமை குறிப்பிடத்தக்கது. மத நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையிலேயே  திருமாவளவன்  நோன்பு நோற்று வருகிறார். நோன்பு நோற்கும் நாட்களில் திருமாவளவன் சென்னையில் இருந்தார் என்றால் சஹர், இஃப்தார் நிகழ்ச்சிகள் களை கட்டும். சாம்கோ, அபுபேலஸ் போன்ற உணவகங்களில் திருமாவளவனோடு சேர்ந்து சஹர் உணவு சாப்பிடுவதற்காக ஒரு பெரிய படையே குவியும்.அதேபோல் தன்னுடன் சேர்ந்து நோன்பு திறப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களையும் திருமா அழைத்து இஃப்தார் விருந்து அளிப்பார். இந்நிலையில் இந்தாண்டு கொரோனா வைரஸ் 2ஆவது அலை பரவல் காரணமாக, ஹோட்டல்களுக்கு செல்வதை தவிர்த்து சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் மட்டுமே சஹர் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார் திருமா.
நடிகர் விவேக்குக்கு திடீர் மாரடைப்பு: ஜெயலலிதாவுக்கு வழங்கிய எக்மோ சிகிச்சை விவேக்குக்கும்  
Fri, 16 Apr 2021 14:17:41 +0530
நடிகர் விவேக்குக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு திணறலும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல் நிலையை பின்னடைவில் இருந்து மீட்க எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இதுபோன்று எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us