Home / Local News / Post:951

காதலியை 10 பேருக்கு விருந்தாக்கிய காதலன் 

Thu, 21 May 2020 14:49:37 +0530 | News Desk
காதலியை 10 பேருக்கு விருந்தாக்கிய காதலன் 

தனது 15 வயதுக் காதலியை நண்பர்கள் 10 பேருக்கு விருந்தாக்கிய சம்பவம் ஒன்று செவனகல மயூரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த மாணவியின் காதலன் இவரை எம்பிலிடியவில் உள்ள விடுதி ஒன்றுக்குப் பல தடவைகள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

அதன் பின் அவரது நண்பர்கள் பலருக்கு காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.இதன் பின் அவரது நண்பர்கள் ஐவர் இந்த மாணவியை ஏமாற்றி செவனகளவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன் பின் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி மேலும் மூன்று இளைஞர்கள் இவரை ஓட்டோ ஒன்றில் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த மாணவி மேற்படி இளைஞர்களுடன் செல்வதைக் கண்ட உறவினர் ஒருவர் மாணவியின் தாயாரிடம் விடயத்தைக் கூறியுள்ளார்.தாயார் அந்த மாணவியிடம் வினவியபோது மாணவி நடந்ததை விபரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தாய் மகளையும் அழைத்துக்கொண்டு செவனகள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்தார்.

அதனைத் தொடர்ந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாணவியின் காதலன் உள்ளிட்ட 4 வரைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us