Home / Sports / Post:949

புதிய கிரிக்கட் மைதானம்:மஹேல கடும் எதிர்ப்பு 

Tue, 19 May 2020 08:18:39 +0530 | News Desk
புதிய கிரிக்கட் மைதானம்:மஹேல கடும் எதிர்ப்பு 

ஹோமாகமவில் 748 கோடி ரூபா செலவில் பிரமாண்டமான சர்வதேச கிரிக்கட் மைதானம் ஒன்றை நிர்மாணிக்கும் அரசின் திட்டத்துக்கு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இருக்கின்ற மைதானங்கள் போதும் என்றும் அவற்றை அபிவிருத்தி செய்வதே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இருக்கும் மைதானங்களிலேயே நாம் சரியாக ஆடுவதில்லை.இந்த லட்சணத்தில் இன்னொன்று தேவைதானா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால்,இந்த மைதானம் சர்வதேச கிரிக்கட் சபையாலேயே நிர்மாணிக்கப்படுகிறது என்றும் அரசு இதற்காக ஒரு சதமேனும் செலவளிக்காது என்றும் இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us