Home / Local News / Post:948

பொலிஸ் பதவியைத் துறந்து வீடு செல்வேன் 

Tue, 19 May 2020 07:03:36 +0530 | News Desk
பொலிஸ் பதவியைத் துறந்து வீடு செல்வேன் 

தனது மகள் தொடர்பில் இணையத்தளங்கள் சிலவற்றிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வரும் செய்தியை உண்மை என்று நிரூபித்தால் தான் பொலிஸ் பதவியைத் துறந்து வீடு செல்வேன் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் கல்வி கற்று வரும் அவரது மகள் இலங்கை வந்தார் என்றும் அவரை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பாது அஜித் ரோஹன விமான நிலையத்தில் இருந்து நைசாக வீட்டுக்கு அழைத்துச் சென்றார் என்றும் செய்திகள் பரவின.

இந்தச் செய்தியை மறுத்தே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,தான் நாட்டுக்கு வராது தொடர்ந்தும் வெளிநாட்டிலேயே இருக்கிறேன் என்று தெரிவித்து அவரது மகள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us