Home / Local News / Post:946

அஜித் ரோஹனவின் மகள்பற்றி பரவும் செய்தி!

Tue, 19 May 2020 06:23:15 +0530 | News Desk
அஜித் ரோஹனவின் மகள்பற்றி பரவும் செய்தி!

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவின் மகள் தொடர்பில் பரவி வரும் செய்தியை அவரது மகள்  மறுத்துள்ளார்.

வெளிநாடு ஒன்றில் கல்வி பயின்று வரும் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படாமல் அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று சமூக வைத்தலங்களில் செய்தி பரவி வருகிறது.

அஜித் ரோஹனவின் மகள் அதை மறுத்துள்ளார்.தான் இலங்கை வரவில்லை என்றும் இன்னும் வெளிநாட்டிலேயே தங்கியுள்ளேன் என்றும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுக் கூறியுள்ளார்.

ஜூன் மாதமே தனது கல்வி நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்று கூறியுள்ள அவர் அதன்பின்பே நாட்டுக்கு வருவேன் என்று அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

 


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us