Home / Sub Lead News / Post:945

சட்டத்தரணி ஹிஜாஸை சந்திக்க  இதுவரை அனுமதி இல்லை

Tue, 19 May 2020 06:02:07 +0530 | News Desk
சட்டத்தரணி ஹிஜாஸை சந்திக்க  இதுவரை அனுமதி இல்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிஐடியால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்திப்பதற்கு அவரது உறவினர்களுக்கோ அல்லது சட்டத்தரணிகளுக்கோ இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்று நேற்று உயர நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால்அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று தெரிவித்து அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று நேற்று அவரது சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு ஜூன் முதலாம் திகதி உயர்நீதிமன்றால் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக சட்டத்தரணிகளுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் அவரைச் சந்திப்பதற்கு நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் நேற்று ஹிஜாஸ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இக்ராம் முஹம்மட் கூறினார்.

அவரைச் சந்திப்பதற்கு அவரது உறவினர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்று அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us