Home / Lead News / Post:943

அதிவேக பாதை நிர்மாணம்:கோடிக் கணக்கில் கொள்ளை

Mon, 18 May 2020 15:48:47 +0530 | News Desk
அதிவேக பாதை நிர்மாணம்:கோடிக் கணக்கில் கொள்ளை

இந்த அரசு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின் ஊடாக இந்த கோடிக் கணக்கான ரூபா பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில்,அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தில் மாத்திரம் இந்த அரசு கவனம் செலுத்துகிறது.

குருநாகல் முதல் தம்புள்ளை வரையான 60 கிலோமீற்றர் அதிவேக நெடுஞ்சாலையை 19,500 கோடி ரூபா செலவழித்து நிர்மாணிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கஹதுட்டுவே முதல் இரத்தினபுரி வரையான 52 கிலோ மீற்றர் நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்காக 2 பில்லியன் டொலரை செலவழிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.சீன நிறுவனம் ஒன்றிடம் நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்படவுள்ளன.

அதேபோல்,32 கிலோ மீற்றர் கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணியை 19,500 கோடி ரூபா செலவில் முன்னெடுப்பதற்கும் நிர்மாணப் பணியை மற்றுமொரு சீன நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்காக கடந்த ஆட்சியில் ஜாப்பான் அரசிடம் இருந்து கடன் உதவி கிடைத்தது.இதை நிர்மாணிப்பதற்காக ஜப்பான் நிறுவனங்கள் பல தெரிவு செய்யப்பட்டன.

இவை எல்லாவற்றையும் ரத்துச் செய்துவிட்டு சீன நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு இப்போதைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலவரத்தின்படி,இது தேவையான ஒன்றல்ல.மக்களின் உண்மையான பிரச்சினைகள் இதுவல்ல.பணம் கொள்ளையடிப்பதற்காகவே அரசு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.என்றார்.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us