Home / Local News / Post:941

ஊரடங்கு அனுமதி பத்திரத்தை விற்க முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Thu, 14 May 2020 11:39:11 +0530 | News Desk
ஊரடங்கு அனுமதி பத்திரத்தை விற்க முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஊரடங்கு அனுமதிப் பத்திரத்தை 5 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சி செய்த பமுனுகம பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கான்ஸ்டபிளிடம் ஊரடங்கு அனுமதி பத்திர புத்தகம் ஒன்று இருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புத்தகம் பமுனுகம பொலிஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்டது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது எந்தப் பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான புத்தகம் என அறிவதற்காக பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகம் தொடர்பில் நாட்டில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அனுமதி பத்திரத்தைப் பெறுவதற்காக பமுனுகம பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்த ஒருவர்மீது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்தே இந்த பொலிஸ் கான்ஸ்டபில் சிக்கினார். 

கைது செய்யப்பட இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இதற்கு முன்பும் இவ்வாறான வேலையைச் செய்திருப்பார் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us