Home / Lead News / Post:937

மாடறுப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மீண்டும் களமிறங்கும் தேரர்கள் 

Mon, 11 May 2020 05:31:43 +0530 | News Desk
மாடறுப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மீண்டும் களமிறங்கும் தேரர்கள் 

கண்டி மாவட்டத்தில் மாடறுப்புக்கு எதிராக நாளை செவ்வாய்க்கிழமை பௌத்த தேரர்கள் மற்றும் பெரும்பான்மை மக்கள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர்.

மாடறுப்பை எதிர்த்து கண்டியில் ஓரிரு வருடங்களுக்கு முன் தீக்குளித்து உயிரிழந்த பொத்த தேரரின் நினைவு தினம் நாளை என்பதால் அதை ஒட்டியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பட்டவுள்ளது.

கண்டி,மஹிய்யாவ அசோகராம விகாரையின் விகாராதிபதியின் தலைமையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.இந்த விகாராதிபதி திகன  கலவரத்துடன் தொடர்புபட்ட அமித் வீரசிங்கவுடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் அசம்பாவிதம் எதுவும் நடக்காதவாறு கண்டி மஹிய்யாவ முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனமும் கண்டி உலமா சபையும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும்,கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லாபிர் ஹாஜியார் மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை,அன்றைய தினம் பள்ளிவாசல்கள் அனைத்துக்கும் பாதுகாப்பு வழங்குமாறு வக்பு சபையும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனால் கண்டியில் முஸ்லிம்கள் மத்தியில் பதட்டம் நிலவத்தொடங்கியுள்ளது.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us