Home / Local News / Post:932

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் 2 வருட சிறை!

Sat, 09 May 2020 05:15:39 +0530 | News Desk
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் 2 வருட சிறை!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளது.அவ்வாறானவர்களுக்கு குறைந்தது 2 வருட சிறைத் தண்டனை வழங்க முடியும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் உள்ளிட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி நாளை 10 ஆம் திகதி வெளியிடவுள்ளனர்.

11 ஆம் திகதி மேல் மாகாணம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் ஊரடங்கு இருக்கின்ற நிலையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை திறப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.இதனையொட்டியே இந்த வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.

அனைவரும் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார நடைமுறையைப் பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் 2 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் அஜித் ரோஹன தெரிவித்தார்.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us