Home / World News / Post:926

நோன்பு நோற்கும் இந்துப் பெண் 

Mon, 04 May 2020 06:29:18 +0530 | News Desk
நோன்பு நோற்கும் இந்துப் பெண் 

இந்தியாவைச் சேர்ந்த பிராமண இந்துப் பெண் ஒருவர் ஒவ்வொரு ரமழான் மாதமும் நோன்பு நோற்று வருகிறார்.

ஜெயசிறி சுக்லா என்ற 52 வயது வரலாற்றுப் பட்டதாரியான இவர் அன்பையும் சமாதானத்தையும் பரப்புவதற்காகத் தான்  தெரிவு செய்த வழி இதுவென்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய பண்புகளால் கவரப்பட்ட அவர் 2019 இல் இருந்து நோன்பு நோற்கத் தொடங்கியுள்ளார்.அப்போது தேர்தல் முடிவுகள் வெளியானபோது நோன்பு 17 ஆகி இருந்தது.

அன்று முஸ்லிம்களுக்கு எதிராக அதிகமான வெறுப்புணர்வு பிரசாரங்கள் பரப்பட்டன.அன்றிலிருந்து முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்த இவர் 17 ஆவது நோன்பில் இருந்து நோன்பு நோற்கத் தொடங்கியுள்ளார்.

தான் வாழும் கூட்டுக் குடும்பத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்தபோது அவரது வாகன சாரதியான முஹம்மட் என்பவரின் உதவியோடு நோன்பு நோற்று வருகிறார்.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us