Home / Local News / Post:911

அதிகரித்துச் செல்லும் எலிக் காய்ச்சல்:  1351 பேர் இதுவரை பாதிப்பு 

Tue, 28 Apr 2020 08:24:34 +0530 | News Desk
அதிகரித்துச் செல்லும் எலிக் காய்ச்சல்:  1351 பேர் இதுவரை பாதிப்பு 

ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 24 ஆம் திகதிவரை 1351 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் வைத்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் 24 வரை 45 பேரும் மார்ச் மாதத்தில் 188 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பெப்ரவரி மாதம் 453 பேரும் ஜனவரி மாதம் 665 பேரும் இந்த எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 273 ஆகும்.

காலி மாவட்டத்தில் 159 பேரும் கழுத்துறையில் 113 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us