Home / World News / Post:893

ATM இல் இருந்து கொரோனா: மூன்று இராணுவ வீரர்களுக்குத் தொற்று

Sun, 26 Apr 2020 05:34:21 +0530 | News Desk
ATM இல் இருந்து கொரோனா: மூன்று இராணுவ வீரர்களுக்குத் தொற்று

ATM இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்த மூன்று இராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லவில்லை.இந்த மூவரும் சென்ற பொதுவான இடம் அந்த ATM இயந்திரம்தான்.இதனால் அந்த இயந்திரத்தில் இருந்தே கொரோனா தொற்றியுள்ளது என்று வைத்தியர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றுள்ளவர்கள் யாரோ இதற்கு முன் அந்த இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துள்ளனர்.அவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் ATM இயந்திரத்தில் பரவி இருந்துள்ளது.

அந்த நேரம் பார்த்து இந்த இராணுவ வீரர்கள் பணம் எடுக்கச் சென்றுள்ளனர்.அப்போதே இவர்களுக்கு அது தொற்றியுள்ளது.

அந்த இராணுவ வீரர்களுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அந்த இயந்திரத்தில் பணம் பெற்றவர்கள் தாமாக முன்வந்து அறிவிக்க வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் CCTV காட்சியின் உதவியுடன் அந்த இயந்திரத்தில் இருந்து பணம் பெற்றவர்கள் யாரென்று விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஆகவே,ATM இல் பணம் எடுப்பவர்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகும்.பணம் எடுத்த பின் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us