Home / Lead News / Post:866

அக்கரைப்பற்றில் இரண்டாவது கொரோனா: முதலாவது நோயாளியின் மனைவிக்கு 

Sun, 12 Apr 2020 07:54:23 +0530 | News Desk
அக்கரைப்பற்றில் இரண்டாவது கொரோனா: முதலாவது நோயாளியின் மனைவிக்கு 

அக்கரைப்பற்றில் மேலும் ஒரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.அங்கு முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபரின் மனைவிக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது என்று சுகாதார பணிப்பாளர் அணில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.அங்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின்போதே அவருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அணில் ஜயசிங்க மேலும் கூறினார்.

இதன்மூலம் கொரோனா தொற்று 199 ஆக அதிகரித்துள்ளது.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us