Home / Local News / Post:843

இனவாதம்-மதவாதம்-வதந்தி பரப்பினால் 7 வருட சிறை 

Mon, 06 Apr 2020 19:42:07 +0530 | News Desk
 இனவாதம்-மதவாதம்-வதந்தி பரப்பினால் 7 வருட சிறை 

கொரோனா வைரஸ் தொடர்பில் இனவாதம்-மதவாதம்-வதந்தி பரப்பினால் அவர்களுக்கு 7 வருடங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பொலிஸார் கொரோனா தொடர்பில் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

சமூக ஊடகங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதில் வதந்திகள் வந்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.யாரும் வதந்திகளை பரப்பி மக்களை சிக்கலில் தள்ளக்கூடாது.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.இனவாதம்,மதவாதம் பரப்புபவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறானவர்களுக்கு எதிராக தொழில்நுட்ப குற்றத்தின்கீழ் 5 வருடங்களும் குற்றவியல் சட்டத்தின்கீழ் 2 வருடங்களும் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றார்.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us