Home / Local News / Post:800

தனிமைப்படுத்தலுக்கு வராது மறைந்து திரிபவர்களை தூக்கில் போட வேண்டும் 

Sat, 28 Mar 2020 09:07:49 +0530 | News Desk
தனிமைப்படுத்தலுக்கு வராது மறைந்து திரிபவர்களை தூக்கில் போட வேண்டும் 

தனிமைப்படுத்தலுக்கு வராமல் மறைந்து திரிபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

கொரோனா வைரஸின் பாதிப்பு எப்படிப்பட்டது என்று இத்தாலியைப் பார்த்தால் புரியும்.இதை உடனே கட்டுப்படுத்தாவிட்டால் இத்தாலி போன்ற அழிவை எதிர்நோக்க வேண்டி வரும்.இதற்கு ஒரே வழி தனிமைப்படுத்தல்தான்.

முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் கைகளில்தான் இது தங்கியுள்ளது.இவர்கள் மறைந்து திரியாமல் உடனடியாக எமக்கு அறிவித்து தனிமைப்படுத்தலுக்கு வர வேண்டும்.

அவ்வாறு செய்யாதுவிட்டால் அவர்களும் பாதிக்கப்பட்டு அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து வந்து அதை மறைத்ததன் காரணமாக அவரிடம் இருந்து தந்தைக்கு வைரஸ் தொற்றியுள்ள சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.

எவ்வளவு கூறியும் இவர்கள் கணக்கில் எடுப்பதாக இல்லை.இவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.இவர்களைத் தூக்கில் போட வேண்டும்.-என்றார்.

 


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us