Home / Lead News / Post:777

கொரோனா தொற்று: முதலாவது இலங்கையர் மரணம்

Wed, 25 Mar 2020 08:11:20 +0530 | News Desk
கொரோனா தொற்று: முதலாவது இலங்கையர் மரணம்

கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்த இலங்கையர் ஒருவர் நேற்று முன்தினம் இத்தாலியில் மரணமடைந்துள்ளார்.இதை இத்தாலி தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தாலி மெஷினா நகரில் வசித்து வந்த இந்த 70 வயது நபர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.கொரோனா தொற்றுக் காரணமாக இத்தாலியில் உயிரிழந்த முதலாவது இலங்கையர் இவரே.

ஏற்கனவே இலங்கை பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோதிலும் அவர் முற்றாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us