Home / Local News / Post:6719

அரிசி விலை 200 ரூபா:மக்கள் மேலும் துன்பத்தில்...

Mon, 10 Jan 2022 08:50:34 +0530 | News Desk
அரிசி விலை 200 ரூபா:மக்கள் மேலும் துன்பத்தில்...

அரிசி ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கும் என்று அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

ஒரு கிலோ நெல்லின் விலை 100 ரூபாவைக் கடந்துள்ளது என்றும் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்வதற்கு 170 ரூபாவை விட அதிகமாக செலவாகிறது என்றும் அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஒரு கிலோ அரிசியின் சில்லறை விலை 185 ரூபாவைத் தாண்டி 200 ரூபா வரை அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை,அரிசி விலை அதிகரிப்பானது பாரிய மில் உரிமையாளர்கள் மேற்கொள்ளும் கொள்ளை நடவடிக்கையாகும் என்று அகில இலங்கை அரிசி ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசு கட்டுப்பாட்டு விலையை நீக்கியதன் காரணமாக பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நினைத்தவாறு விலையை உயர்த்துகின்றனர் என்றும் அரசே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர்கள் கூவுகின்றனர்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us