அமைச்சரவை மாற்றம் இன்று அல்லது நாளை இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவையில் தற்போதுள்ள இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் கெபினட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என்றும் தற்போதுள்ள கெபினட் அமைச்சர்கள் பலர் பதவி நீக்கப்படுவர் என்றும் அறிய முடிகிறது.
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது என்று அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.
அரசமைப்பின்படி 30 பேர் மாத்திரமே கெபினட் அமைச்சர்களாக இருக்க முடியும்.இப்போது 29 பேர் கெபினட் அமைச்சர்களாக உள்ளனர்.இன்னும் ஒருவர் மாத்திரமே நியமிக்கப்பட முடியும்.
தற்போதுள்ள கெபினட் அமைச்சர்கள் பலர் நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் நிமியக்கப்படவுள்ளனர்.
அமைச்சின் செயலாளர்களிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது.