Home / Local News / Post:6714

மக்கள் இங்கு துன்பம்: 80 எம்பிக்கள் வெளிநாடுகளில் இன்பம் 

Sun, 26 Dec 2021 11:08:21 +0530 | News Desk
மக்கள் இங்கு துன்பம்: 80 எம்பிக்கள் வெளிநாடுகளில் இன்பம் 

இலங்கையில் தலைதூக்கியுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு மத்தியில் எதிர்க்கட்சி மற்றும் அரச எம்பிக்கள்-அமைச்சர்கள் என 80 பேர் உல்லாசம் அனுபவிப்பதற்காக ஜனவரியில் வெளிநாட்டு சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொள்கின்றனர்.

ஜனவரி 18 இல் நாடாளுமன்றம் கூடுவதால் இந்த எம்பிக்களுக்கு இது மேலும் வசதியாகிப்போய்விட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கே இவர்கள் சுற்றுலா செல்கின்றனர்.

பொருளாதார பிரச்சினையால் மக்கள் இங்கு துன்பப்படும் நிலையில் எம்பிக்கள்-அமைச்சர்கள் இவ்வாறு உல்லாசம் அனுபவிப்பது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று அறிய முடிகிறது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us