Home / Local News / Post:6712

அமைச்சுப் பதவிகளைத் துறந்து எம்முடன் இணையுங்கள்: விமல்-கம்மன்பில-வாசுவுக்கு அழைப்பு 

Thu, 23 Dec 2021 09:08:17 +0530 | News Desk
அமைச்சுப் பதவிகளைத் துறந்து எம்முடன் இணையுங்கள்: விமல்-கம்மன்பில-வாசுவுக்கு அழைப்பு 

அமைச்சுப் பதவிகளை வகித்துக்கொண்டு அரசை விமர்சிக்காமல் அந்தப் பதவிகளைத் துறந்துவிட்டு  எம்முடன் இணையுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுக்கிறது.

இது தொடர்பில் அக்கட்சியின் எம்பி ஹர்சன ராஜகருணா கூறுகையில்;

நாளை ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள்.நாம் காட்டாயம் வெல்வோம்.மக்களுக்கு வெறுத்துவிட்டது இந்த அரசு.கோட்டாவுக்கு வாக்களித்த 69 லட்சம் பேரில் 60 லட்சம் பேர் கோட்டாவுக்கு எதிராக இருக்கின்றனர்.

முதலில் எந்தத் தேர்தல் வந்தாலும் வெல்வோம்.ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் சஜித் பிரேமதாஸாதான்.வேறு கட்சியில் ஒருவரை ஜனாதிபதியாக்கி ஆட்சி நடத்த நாம் விரும்பவில்லை.கடந்த கால அனுபவம் எங்களுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது.

விமல் வீரவன்ச,வாசுதேவ,கம்மன்பில  போன்றவர்கள் அரசுக்கு எதிராக வெளியில் வந்து பேசுகிறார்கள்.அமைச்சரவைக்குள் இருந்து பேச வேண்டியதை வெளியில் வந்து பேசுகிறார்கள்.இது பொருத்தமற்ற எதிர்ப்பு.

உண்மையில் இவர்கள் அரசின் செயற்பாட்டை எதிர்ப்பவர்கள் என்றால் அமைச்சுப் பதவிகளைத் துறந்து எம்முடன் இணையுங்கள் என்றார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us