Home / Sub Lead News / Post:6711

நிர்வாக விடயங்களில் இராணுவ அதிகாரிகள்:பொன்சேகா எதிர்ப்பு

Thu, 23 Dec 2021 06:09:50 +0530 | News Desk
நிர்வாக விடயங்களில் இராணுவ அதிகாரிகள்:பொன்சேகா எதிர்ப்பு

அமைச்சின் செயலாளர்களாகவும் நிறுவனங்களின் பணிப்பாளர்களாகவும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துக்கூறுகையில். 

இது இராணுவ ஆட்சி ஆட்சியல்ல.இருந்தாலும்,நிர்வாக விடயங்களுக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமித்திருப்பது பிழை.அதை ஏற்க முடியாது.

நான் அமைச்சராக இருந்தபோது எந்தவோர் இராணுவ அதிகாரியையும் நான் நியமிக்கவில்லை.எனது அமைச்சில் இருந்த செயலாளர்களுடன்டான் நான் வேலை செய்தேன்.அந்தத் துறையில் திறமையானவர்களும் அனுபவமுள்ளவர்களும் அவர்களே.

இராணுவ அதிகாரிகள் வேறு விடயத்தில் திறமையானவர்கள்.ஆனால்,நிர்வாக விடயத்தில் வேறு திறமையானவர்கள் உள்ளனர்.

நான் அமைச்சராக இருந்தபோது எனது செயலாளர் வழங்கிய ஆலோசனைகளை நான் புறக்கணிக்கவில்லை.அவர்களிடம் இருந்து பெரும் ஒரு விடயத்தை இராணுவத்தின் மேஜர் ஜெனெரல் ஒருவரிடம் இருந்து பெற முடியாது.என்றார்.

 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us