Home / Local News / Post:6703

ஒரே நாடு ஒரே சட்டம் வேலைத்திட்டத்தை உடன் நிறுத்துக...

Sun, 19 Dec 2021 19:29:54 +0530 | News Desk
ஒரே நாடு ஒரே சட்டம் வேலைத்திட்டத்தை உடன் நிறுத்துக...

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது மக்களை ஏமாற்றும் இனங்களிடையே இனவாதத்தைத் தூண்டும் செயல்.இதை உடனே நிறுத்த .வேண்டும் என்று வேலுகுமார் எம்பி கூறினார்.இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;

ஒரே நாடு ஒரே சட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்.பிக்குகளைக்கூட மதிக்காதவர்.

இப்படியான ஒருவரைத் தலைவராக நியமித்தால் சரி வருமா?இதுவொரு நகைச்சுவை நாடகம்.அரசில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் இதுகுறித்து வெட்கப்பட வேண்டும்.

அரசு பழைய முறைமையில் சென்று ஆட்சியை மீண்டும் பிடிக்க-இருக்கின்ற ஆட்சியை பலப்படுத்த இவ்வாறான வேலைகளை செய்கிறது.

தொடர்ச்சியாக மதவாதத்தைக் கிளப்புவதும் தொடர்ச்சியாக இனவாதத்தைக் கிளப்புவதும் இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதும் என்றே இவர்களின் அரசியல் அமைந்துள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது மக்களை ஏமாற்றும்-இனங்களிடையே இனவாதத்தைத் தூண்டும் செயல்.இதை உடனே நிறுத்த .வேண்டும்

இனி இவர்களின் நாடகம் எடுபடாது.மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள்.என்றார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us