Home / Local News / Post:6701

போதைப் பொருள் பாவனை உச்சம்; அதற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் 

Sun, 19 Dec 2021 10:51:35 +0530 | News Desk
போதைப் பொருள் பாவனை உச்சம்; அதற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் 

நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் அதற்கு அடிமையாகியுள்ள அதிகமான பெண்கள் பாலியல் தொழில் செய்து போதைப்பொருள் பாவனைக்கான பணத்தைத் தேடுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 1 லட்சத்து 26 பேர் நாடு பூராகவும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுள் பாடசாலை மாணவர்கள்தான் அதிகம்.சிறை செல்பவர்களுள் அதிகமானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களே.

அதிலும் அதிகமான பாவனையார்கள் பெண்கள்தான்.அவர்களுள் 50 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனைக்காகத் தேவைப்படும் பணத்தை பாலியல் தொழில்மூலம் பெறுகிறார்கள்.

மேலும் சில பெண்கள் சிறு கைத்தொழில் மூலமாகவும் போதைப்பொருள் விற்பனை மூமாகவும் போதைப்பொருள் பாவனைக்குத் தேவையான பணத்தை பெறுகின்றனர்.

தினமும் புதிதாக 8 பேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றனர் என்று அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us