எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் போட்டி இப்போதே தொடங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸாவே எதிர்க்கட்சியின் வேட்பாளர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.இருந்தும்,அக்கட்சிக்குள் மாத்திரம் மூவர் அதற்கான போட்டியில் இறங்கியுள்ளனர் என்று தெரிய வருகிறது.
ஒருவர் சஜித் பிரேமதாசா.அடுத்த இருவரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிபெற்றர்கள் என்று அறிய முடிகிறது.
சிறுபான்மை கட்சி ஒன்றில் வெற்றி பெற்ற ஒருவரும் அவர்களுள் அடங்குகின்றனர் என்றும் தெரிய வருகிறது.
மேலும்,அர்ஜூன ரணதுங்க,சந்திரிக்கா அம்மையாரின் ஆதரவு பெற்ற ஒருவர் என மொத்தம் 7 பேர் இந்தப் பட்டியலில் அடங்குகின்றனர்.